அணுக்கரு பிளவு அல்லது இணையும் போது வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களிலிருந்து அணுசக்தி பெறப்படுகிறது.

1940 ஆம் ஆண்டு இந்தியாவில் அணுமின்திட்டம் தொடங்கப்பட்டு பின்னர் 1948 ஆம் ஆண்டு டாடா அணு ஆராய்ச்சிக் கழகம் இத்துடன் இணைக்கப்பட்டது.

1956, செப்டம்பர், 23 – சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு (International Automic Energy Agency) தொடங்கப்பட்டது. இதன் நோக்கமாக, உலக அமைதிக்காக அணு ஆற்றலின் உபயோகத்தினை அதிகப்படுத்துவதை் கொண்டு தொடங்கப்ட்டது.

1969 ஆம் ஆண்டு, 320 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம், மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவிற்கு அருகிலுள்ள (100 மெகா வாட்), இரவத் பட்டா (335 மெகா வாட்) , என்னுமிடங்களில் அணுமின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் கல்பாக்கம் (440 மெகா வாட்), மற்றும் கூடங்குளம் (2,000 மெகா வாட்), உத்திரப்பிதேசத்தில் நரோரா (235 மெகா வாட்), குஜராத்தில் காக்கரபாரா (235 மெகா வாட்) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.