அமீபா
அமீபா என்பது மூத்தவிலங்கினங்களிலுள்ள ஒரு பேரினம் ஆகும்.
அமீபா ஓரணுவுயிர்களின் தொகுதியில் வேக்காலிகள் (Rhizopoda) வகுப்பைச் சேர்ந்ததாகும்.
உதிர்ந்த மட்கும் இலைகள், குளங்கள் குட்டைகளின் அடித்தளத்தை ஒட்டிய நீர்ப்படிவுகள் போன்ற இடங்களில் அமீபா உயிர்ப்பிக்கிறது.
அமீபாவின் கலமானது கருவைக் கொண்டிருக்கும் ஒரு மெய்க்கருவுயிரி ஆகும்.
இதனை அதிநுண்ணுயிரிகளின் கூட்டத்துள் சேர்க்கலாம்.
மார்ச்சு 1, 2016 அன்று நேச்சர் கம்மியூனிக்கேசன்சு அறிக்கையில், அமீபாவிற்கு மனித இனத்தைப் போன்றே நோயெதிர்ப்பு சத்து உள்ளது என எடுத்துரைக்கிறது.
மனிதர்கள் மற்ற உயர் விலங்குகளில் உள்ள தின்குழியங்களைப் (phagocytes) போன்றே இந்த அமீபாக்களின் உடலில் புறவுயிர்மி வலைகள் (extracellular nets) பாக்டீரியா (bacteria) அழிக்கின்றது என அந்த செனீவாப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.
அமீபா இறப்பு இல்லாத உயிரினம் என்று அழைக்ககப்படுகிறது.