மூலவர் : நாகராஜர்தல
விருட்சம் : ஓடவள்ளி
தீர்த்தம் : நாகதீர்த்தம்
ஆகமம்/பூஜை : சைவம், வைணவம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : நாகர்கோவில்
மாவட்டம் : கன்னியாகுமரி
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:
தை மாதத்தில் பிரம்மோற்ஸவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை.
நாகர் வழிபாட்டின் முக்கியத்துவம்:
சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை.
ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது.
புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும், அதை தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது.
மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.
ஓலைக்கூரை சன்னதி:
மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பர்.
ஆனால், இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளன. நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே துவாரபாலர்களாக அமைத்துள்ளனர்.
நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், இவையே இக்கோயிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள்.
நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து, புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.
தோஷ நிவர்த்தி:
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன், அவர் ராமனாக அவதாரம் எடுத்தபோது தம்பி லட்சுமணராக பிறந்தார். எனவே, லட்சுமணரின் நட்சத்திரமான ஆயில்யத்தன்று நாகராஜாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதுதவிர, தினமும் காலை 10 மணிக்கு பாலபிஷேகம் நடக்கும்.
நாகராஜரிடம் வேண்டி கோரிக்கை நிறைவேறியவர்கள் பால்பாயாசம் படைத்தும் வழிபடுகிறார்கள். கோயில் வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் நாகர் சிலைகளை வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவதுண்டு.
நிறம் மாறும் மணல்:
மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது.
இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாகத் தருகிறார்கள். தட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை) வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.
ஆவணி ஞாயிறு விசேஷம் ஏன்?:
இந்தக் கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதற்கானகாரணம் என்ன தெரியுமா? ஆவணி மாதம் மழைக்காலமாகும். இக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமிருக்கும்.
இவற்றால் விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆவணியில் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாம்பு வழிபாடு மேற்கொண்டனர். நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்வித்தனர்.
ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம் ஆவணி என்பதாலும், இந்த மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளை சிறப்பு வழிபாட்டுக்குரிய காலமாக கொண்டனர் என்றும் ஒரு கருத்து உண்டு. கேரள முறைப்படி இக்கோயிலில் பூஜை நடக்கிறது.
பெருமாளுக்கு திருவிழா:
நாகராஜர் சன்னதிக்கு வலப்புறம் அனந்தகிருஷ்ணர், காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. நாகராஜருக்கு பூஜை செய்தபின்பு, இவர்களுக்கு பூஜை நடக்கும்.
அர்த்தஜாம பூஜையில் மட்டும், அனந்தகிருஷ்ணருக்கு முதல்பூஜை செய்வர். இக்கோயிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்தகிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
தை மாதத்தில் பிரம்மோற்ஸவமும் இவருக்கே நடக்கிறது. தைப்பூசத்தன்று இவர் தேரில் எழுந்தருளுவார்.
ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவம் நடக்கும். கிருஷ்ண ஜெயந்தி விழாவும் இவரது சன்னதியில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
கொடிமரத்தில் ஆமை:
பெருமாள் கோயில் கொடிமரங்களின் உச்சியில், கருடனை வடிவமைப்பர். இங்குள்ள அனந்த கிருஷ்ணர் சன்னதி கொடிமரத்தில் கருடனுக்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர்.
பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனை இங்குள்ள கொடிமரத்தில் வடிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர்.
விசேஷ காலங்களிலும், மாதாந்திர ஆயில்ய நட்சத்திரநாட்களிலும் அனந்தகிருஷ்ணர் ஆமை வாகனத்திலேயே புறப்பாடாகிறார். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் ஆமையை வடிவமைத்ததாகச் சொல்கிறார்கள்.
மகாமேரு மாளிகை:
இது கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும், தெற்கு வாசலே பிரதானமாக இருக்கிறது. இந்த வாசலை, “மகாமேரு மாளிகை’ என்று அழைக்கிறார்கள்.
மாளிகை வடிவில் உயரமாக அமைந்த வாசல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. நாகராஜர் சன்னதியின் இடப்புறம் நாகர் தீர்த்தம் இருக்கிறது.
ஓடவல்லி என்னும் கொடி இத்தலத்தின் விருட்சம். தற்போது இக்கொடி இல்லை. வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது.
இதில் பூக்கும் நாகலிங்கப் பூவை நாகராஜரின் குறியீடாகக் கருதி வழிபடுகிறார்கள்.
“அம்மச்சி” துர்க்கை:
கோயில் வளாகத்தில் துர்க்கை சன்னதி இருக்கிறது. இச்சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததால் இவளை “தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள்.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகராஜரையும், இவளையும் வழிபடுகிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை “அம்மச்சி” என்று மலையாளத்தில் அழைப்பது வழக்கம்.
இந்ததுர்க்கையையும், தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாகக் கருதி, “அம்மச்சி துர்க்கை’ என்று அழைக்கிறார்கள்.
தல வரலாறு:
பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள்.
அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.
தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார்.
மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில்எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், “நாகர்கோவில்” என பெயர் வந்தது.
தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த பெரியகோவில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.
ஓம் சிவாய நம
சர்வம் சிவமயமே எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்…
சைவம் வளர்த்தோர்
சேக்கிழார்
திருமூலர்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவி ஆழ்வார்
குழசேகராழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள் நாச்சியார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார்
சித்தர்கள்
திருமூலர்
இராமதேவர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வான்மீகி
கமலமுனி
போகநாதர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்திதேவர்
போதகுரு
பாம்பாட்டிச் சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்த தேவர்
கோரக்கர்
அகப்பேய் சித்தர்
அழுகணிச் சித்தர்
ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
சதோகநாதர்
இடைக்காட்டுச் சித்தர்
புண்ணாக்குச் சித்தர்
ஞானச்சித்தர்
மௌனச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
கல்லுளி சித்தர்
கஞ்சமலைச் சித்தர்
நொண்டிச் சித்தர்
விளையாட்டுச் சித்தர்
பிரமானந்த சித்தர்
கடுவெளிச் சித்தர்
சங்கிலிச் சித்தர்
திரிகோணச்சித்தர்
வான்மீகர்
பதஞ்சலியார்
துர்வாசர்
ஊர்வசி
சூதமுனி,
வரரிஷி
வேதமுனி
கஞ்ச முனி
வியாசர்
கௌதமர்
காலாங்கி
கமலநாதர்
கலசநாதர்
யூகி
கருணானந்தர்
சட்டைநாதர்
பதஞ்சலியார்
கோரக்கர்
பவணந்தி
புலிப்பாணி
அழுகணி
பாம்பாட்டி
இடைக்காட்டுச் சித்தர்
கௌசிகர்
வசிட்டர்
பிரம்மமுனி
வியாகர்
தன்வந்திரி
சட்டைமுனி
புண்ணாக்கீசர்
நந்தீசர்
சப்த ரிஷிகள்.
அகப்பேய்
கொங்கணவர்
மச்சமுனி
குருபாத நாதர்
பரத்துவாசர்
கூன் தண்ணீர்
கடுவெளி
ரோமரிஷி
காகபுசுண்டர்
பராசரர்
தேரையர்
புலத்தியர்
சுந்தரானந்தர்
திருமூலர்
கருவூரார்
சிவவாக்கியர்
தொழுகண்
பால சித்தர்
ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
அஷ்ட வசுக்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்
மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்
மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்
தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்
அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?
கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?
அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்
கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?
274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு
63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்
மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்