அர்ஜென்டினா (ஆங்கிலம்: Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.
இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான புவெனசு ஐரிசு நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது.
பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும்.
ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது.
ஸ்பானிஷ் மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும்.
அர்ஜென்டினா, ஐக்கிய நாடுகள் அவை, “மெர்கோசுர்” எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று.
அத்துடன் 15 நாடுகள் குழு (சி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும், இடைத்தர வல்லரசுமான அர்ஜென்டினா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகும்.
மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது.
இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் அர்ஜென்டினா உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.
2022, டிசம்பர், 22 – கத்தாரில் நடந்த உலகக் கோப்பை வெற்றியை குறிக்கும் வகையில் அர்ஜென்டினாவின் மத்திய வங்கி, லியோனல் மெஸ்ஸியின் முகத்தை 1,000 பெசோ வங்கி தாள்களில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளது. அர்ஜென்டினாவின் கரன்சி, “அர்ஜென்டினா பெசோ” என அழைக்கப்படுகிறது.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து