ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு – ஆங்கிலேயர்களின் ஆட்சி – ஐக்கிய இராச்சியம்1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் ஆங்கிலேய  கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. இதற்கான அரச பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார்.

1608 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவரை வணிகக்குழு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு அனுப்பி சூரத்தில வணிக நிலயம் அமைப்பதற்கான அனுமதியைக் கோரியது.

முதலில் இதனை நிராகரித்தாலும், ஆங்கிலேயர் தங்களது முதலாவது வணிக நிலையத்தை சூரத்தில் நிறுவ ஜஹாங்கீர் 1613ல் ஆணை வழங்கினார்.

பின்னர், சர் தாமஸ் ரோ என்பவர் மேலும் பல சலுகைகளையும் உரிமைகளையும் வணிகக் குழுவிற்கு பேற்றுத் தந்தார். இதனால், ஆங்கிலேயர் ஆக்ரா, அகமதாபாத், புரோச் ஆகிய இடங்களில் தமது வாணிப மையங்களை அமைத்தனர். இவ்வாறு ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவினர் படிப்படியாக தங்களது வாணிப எல்லையை விரிவுப்படுத்தி வந்தனர்.

1639ல் பிரான்சிஸ் டே என்பவர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்.

1668 ஆம் ஆண்டு, மேற்குக் கடற்கரையில், அரசர் இரண்டாம் சார்லசிடமிருந்து ஆண்டுக்கு பத்து பவுன் வாடகைக்கு வணிகக்குழு பம்பாய் தீவைப் பெற்றது.

1690 ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் என்ற வணிகக் குழுவின் முகவர் சுதநூதி, கோவிந்தபூர். காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார். இவை பின்னர் கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட கோட்டைக்கு ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியத்தின் நினைவாக வில்லியம் கோட்டை என்று ஜாப் சார்னாக் பெயரிட்டார்.

இந்தியக் கடற்கரை ஓரங்களில் நிறுவப்பட்ட ஆங்கில வணிக நிலையங்கள் அனைத்தும் பம்பாய், சென்னை, கல்கத்தா மாகாணங்களாக பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டன.

1770 ஆம் ஆண்டு, வெள்ளையர்கள் ஆட்சியில் நிறுவப்பட்ட ஹிந்துஸ்தான் வங்கி (Bank of Hindustan) இந்தியாவின் முதல் வங்கி ஆகும்.

1772 ஆம் ஆண்டு வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸை நியமித்தது.

1757ஆம் ஆண்டு பிளாசிப் போர், 1764 ஆம் ஆண்டு பக்சார் போர் ஆகியவற்றின் விளைவாக வணிகக் குழு ஒரு அரசியல் சக்தியாக மாறியது.

1786 – ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

1809 ஆம் ஆண்டு, வங்காள வங்கி (Bank of Bengal) ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

1816, மார்ச், 04 – அன்று, ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில் ஏற்பட்ட சுகௌலி போர் உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினர் கைப்பற்றியிருந்த மொரங், சிக்கிம், டார்ஜிலிங், கார்வால் மற்றும் சிர்முர், குமாவுன் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுக் கொடுத்தனர்.

1820 ஆம் ஆண்டு, பிரித்தானிய குடியேறிகள் தென்னாப்பிரிக்க நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை கைப்பற்றினர்.

1840 ஆம் ஆண்டு, மும்பை வங்கி (Bank of Bombay) ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

1843 ஆம் ஆண்டு, சென்னை வங்கி (Ban of Madras) ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

1846 – ஆம் ஆண்டு ஆண்டு நடந்த, முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரின் முடிவில் சீக்கியரின் தோல்விக்குப்பின், ஏற்பட்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின் கீழ் பிரிட்டிஷாரிடமிருந்து 75 இலட்சம் ரூபாய்க்கு காஷ்மீர், வடக்கு நிலங்கள் மற்றும் லடாக் பகுதியை ஜம்மு அரசர் குலாப் சிங் வாங்கினார். குலாப் சிங் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் முதல் ஆட்சியாளர் ஆனார்.

1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய நிலப்பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை, இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியே நடைப்பெற்றது. வணிகக்குழு ஆட்சியின் போது வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக ராபர்ட் கிளைவ் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து வெர்ல்ஸ், கார்ட்டியர் இருவரும் அப்பதவியில் இருந்தனர்.

1899, ஜனவரி, 06 – முதல், 1905, நவம்பர், 18 வரை, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனராக கர்சன் பிரபு பணியாற்றியவார்.

1892 – ஆம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜி அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1910 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில், பிரித்தானியர்கள் போயர்களை தோற்கடித்தனர் என்றாலும், அவர்கள் பிரித்தானிய ஆட்சிப்பகுதியாக, தென்னாப்பிரிக்காவிற்கு நிபந்தனைக்குட்பட்ட விடுதலையை வழங்கினர்.

1914 – ஆம் ஆண்டு, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில், வெளிநாட்டினரின் நுழைவுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினரின் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

1921 ஆம் ஆண்டு பிரசிடென்சி வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியன் இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது.

1923 – ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது, இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் நேபாளத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டது.

1929 – இந்தியாவில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க சாரதா சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது.

1971, செப்டம்பர், 03 – அன்று ஐக்கிய இராச்சியத்திடமிருந்து கத்தார் நாட்டின் விடுதலை அறிவிக்கப்பட்டது.