2022, அக்டோபர், 18 – ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


தலைநகரம் – கன்பரா

ஆட்சி மொழி – ஆங்கிலம்

மக்கள் – ஆஸ்திரேலியன்

அரசாங்கம் – மக்களாட்சி (அரசியலமைப்பு முடியாட்சி)

பரப்பளவு – 77,41,220 ச.கி.மீ

நாணயம் – டாலர் (AUD)

தொலைபேசி அழைப்புக்குறி +61

வலைதளக்குறி .au

ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு.

இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது.

எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. மேலும் மற்ற நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்துகொள்ளாத மிகப்பெரிய நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன.

கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது.

அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர்,

1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர்.

ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது.

பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன.

ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும்.

பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி) மட்டுமே.

இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர்.

ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது.

ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது.

தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.

தீவுக்கண்டம் என்று அழைக்கப்படும் நாடு ஆகும்.

கோடைக்காலத்தில் கிருஸ்மஸ் கொண்டாடும் நாடு, ஆஸ்திரேலியா ஆகும்.

உலகில் மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

1971, ஜனவரி, 05 – உலகின் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர் நகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது.

1901, ஜனவரி, 1 – ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1973, செப்டம்பர், 20 – ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரில் பிரபல டச்சு கட்டிடக் கலை வல்லுநரான John Utzon – என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒபேரா ஹவுஸ் (Opera House) – ஆனது, இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

கர்னம் மல்லேஸ்வரி, 2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 110 கிலோ (Snach) மற்றும் 130 கிலோ (Clean and Jerk) ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 240 கிலோ எடை தூக்கினார். இதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றார் மேலும் இந்தியாவிலிருந்து தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெறுமையினைப் பெற்றார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.

உலகிலேயே எரிமலைகள் இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா ஆகும்.

ஆஸ்திரேலிய கண்டுபிடிப்பாளரான சார்லஸ் ரோதௌசர் உலகின் முதல் பிளாஸ்டிக்கால் ஆன அப்புறப்படுத்தக்கூடிய ஊசியை உருவாக்கினார்.

ஆஸ்திரேலியாவின், 5 மற்றும் 100 டாலர் பணத்தாள்கள் நெகிழியால்(Plastic) செய்யப்படுகிறது.