இங்கிலாந்து – பிரிட்டன் – ஐக்கிய இராஜ்ஜியம்இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும்.

மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது.

ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், செல்டிக் கடலைத் தென் மேற்கிலும் வடகடலைக் கிழக்கிலும் கொண்டுள்ளது.

ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் இங்கிலாந்தைப் பிரிக்கிறது.

பெரிய பிரித்தானியாவின் தென், நடுவண் பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் சில்லி தீவுகள் போன்ற நூற்றுக்கும் மேலான சிறுசிறு தீவுகளையும் அடக்கி உள்ளது.

ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது.

இதன் தலைநகரம் லண்டன் ஆகும்.

இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது.

தற்போது இங்கிலாந்தாக அறியப்படும் பகுதியில் பிந்தைய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

இருப்பினும் ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இங்கு குடிபுகுந்த ஜெர்மானிய பழங்குடிகளில் ஒன்றான ஆங்கில்களைக் கொண்டே இது ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் இங்கிலாந்து என அறியப்படலாயிற்று.

கி.பி. 927 – இல் இங்கிலாந்து முற்றிலுமாக ஒன்றிணைக்கப்பட்டது; 15வது நூற்றாண்டிலிருந்து உலகெங்கும் சட்ட, பண்பாட்டு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆங்கில மொழி, ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் ஆங்கிலச் சட்டம்— பல நாடுகளில் நடப்பில் இருக்கும் பொதுச் சட்டத்திற்கான சட்ட அடிப்படை— இங்குதான் உருவானது.

இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறைமை உலகின் பலநாடுகளின் அரசியலமைப்புக்களில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியால் உலகின் முதல் தொழில்மயமான நாடாக விளங்கியது.

இங்கிலாந்தின் புவிப்பரப்பு பெரும்பாலும் சிறு குன்றுகளும் சமவெளிகளாகவும் உள்ளது.

இருப்பினும் வடக்கிலும் தென்மேற்கிலும் சில உயரமான மலைப்பகுதிகளைக் காணலாம்.

தலைநகரம் – லண்டன்

ஆட்சி மொழி – ஆங்கிலம்

மக்கள் – ஆங்கிலேயர்

அரசாங்கம் – அரசியல் சட்ட முடியாட்சியுடன் கூடிய நிலையான அரசியலமைப்பு உடைய நாடு

சட்டமன்றம் – ஐக்கிய இராஜ்ஜியத்தின் மக்களவை

நாணயம் – பிரிட்டிஷ் பவுண்டு (GBP)

தொலைபேசி அழைப்புக்குறி +44

வலைதளக்குறி .uk

இங்கிலாந்தின் முன்னாள் தலைநகரமாக வின்செஸ்டர் இருந்தது; 1066 இல் தலைநகர் இலண்டனுக்கு மாற்றப்பட்டது. இன்றைய நாள் இலண்டன் ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது.


1600 ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களால் தோற்றிவிக்கப்பட்டது. அது பின்னர் இந்தியாவில் ஆட்சி செய்த ஜஹாங்கீரின் அனுமதி பெற்று சூரத்தில் தனது வியாபாரத் தளத்தை ஏற்படுத்தியது.

1707– இன் வேல்ஸ் அடங்கிய இங்கிலாந்து இராச்சியம் ஒன்றிணைப்புச் சட்டங்கள் மூலமாக பெரிய பிரித்தானிய இராச்சியமாக ஸ்காட்லாந்து இணையும்வரை தனி மன்னராட்சியாக விளங்கியது.

1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி, பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னர், இங்கிலாந்தின் பெர்க்லி நகரில் பிறந்தார்.

1763, பிப்ரவரி, 10 – பிரான்ஸ், க்யூபெக் மாநிலத்தை பிரிட்டனுக்கு அளித்தது.


1801 இல், பெரிய பிரித்தானியா அயர்லாந்து இராச்சியத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது.

1808 – இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார். இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார்.

1819, ஜனவரி, 29 – அன்று, சர் தாமஸ் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் என்பவர் தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் தரை இறங்கினார். இந்தப் பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் சார்பில் வணிக நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினார். இதுவே பின்னாளில் சிங்கப்பூர் நாடானது.

1819, பிப்ரவரி, 6 – அன்று, தேதி ஜொகூர் சுல்தானகத்தின் மன்னராக இருந்த சுல்தான் உசேன் ஷா (Hussein Shah of Johor) என்பவருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் வணிக நிலையம் ஒன்றையும்; குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக் கொண்டது.

1824, ஆகஸ்ட், 2 – அன்று, ஜான் குரோபுர்ட் (John Crawfurd), சுல்தான் உசேன் ஷாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் உசேன் ஷா, சிங்கப்பூர் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்கு வழங்கினார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். சிங்கப்பூரில் இருந்த இரண்டாம் நிலை அதிகாரியான ஜான் குரோபுர்ட் (John Crawfurd) என்பவரே சிங்கப்பூரைப் பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர்.

1825, செப்டம்பர், 27 – அன்று, உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.

1826-இல் சிங்கப்பூர், தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது.

1850 ஆம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், இங்கிலாந்திலுள்ள லண்டனில் பணிபுரிந்தபோது ரஷ்ய பேரரசுக்கும், பிடிட்டஷ் பேரரசுக்கும் இடையெ ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.


1852 – ஆம் ஆண்டில், இராபர்ட் அங்கஸ் ஸ்மித் என்பவர் முதன்முதலில் அமில மழை மற்றும் வளிமண்டல மாசுபாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பினை இங்கிலாந்தில் மான்செஸ்டரில் காட்டினார்.

1854 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஜான் ஸ்னோ என்ற மருத்துவர் லண்டன் நகரம் முழுவதும் காலரா பரவியிருந்து இடங்களுக்கான முதல் கருத்துசார் நிலவரைபடத்தை வரைந்து ஆய்வு செய்தார்.

1856-ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சி செய்தது.

1862 – நெகிழி அல்லது பிளாஸ்டிக் முதன் முதலில் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

1864 ஆம ஆண்டு, வங்கிக் கலையின் அடிப்படையில் பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும். (Bank of England).

1867, ஜூலை, 1 – பிரிட்டனிடமிருந்து கனடா விடுதலை அடைந்தது.

1867-ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது.

1883 ஆம் ஆண்டு, மார்ச், 14 அன்று, கார்ல் மார்க்ஸ், இங்கிலாந்தின் லண்டனில் இறந்தார்.

1896 – ஆம் ஆண்டு, வரலாற்றில் 38 நிமிடமே நீடித்த மிகச்சிறிய போர், பிரிட்டன் – சான்சிபார் இடையே நடந்தது.

1898 – ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சேவும், ஆங்கில வேதியியலாளர் மோரிசு டிராவர்சும் கிரிப்டானைக் கண்டுபிடித்தனர்.


1922 இல், அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தாலும் 1927 சட்டத்தின்படி வடக்கு அயர்லாந்தின் ஆறு கௌன்ட்டிகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து தற்போதுள்ள பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துகளின் ஐக்கிய இராச்சியம் நிலைபெற்றது.

1930 ஆம் ஆண்டு, இங்கிலாந்து திரும்பிய சைமன் குழு தனது அறிக்கையை சமர்பித்தது. அதில் இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, இந்தியர்களுக்கு முழு பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரை செய்தது.

1930 ஆம் ஆண்டு, முதல் வட்ட மேசை மாநாடு (சட்ட மறுப்பு இயக்கம் நடைபெற்றதால் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை), இங்கிலாந்திலுள்ள லண்டனில் நடைபெற்றது.

1932 ஆம் ஆண்டு, வகுப்பு வாத அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் மெக்டொனால்டு வெளியிட்டார், இதில் சிறுபான்மையினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

1932 ஆம் ஆண்டு, மூன்றாவது வட்ட மேசை மாநாடு இங்கிலாந்திலுள்ள லண்டனில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவரகள் யாரும் பங்குபெறவில்லை. இதனால் இம்மாநாடு தோல்வியுற்றது.

1938 ஆம் ஆண்டு, ஹிட்லர், இங்கிலாந்து பிரதமர் நிவின் சேம்பர்லைனுடன் முயூனிச் என்ற இடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி செக்கோஸ்லோவோக்கியாவை கைப்பற்றியது இரண்டாம் உலகப்போருக்கு காரணமாயிற்று.

1940, ஜூன், 10 – அன்று, இரண்டாம் உலகப்போரின் போது, இத்தாலியானது, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீது போர் பிரகடனம் செய்தது.

1945 – ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.

1946 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் முதல் கூட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்றது.


1951, டிசம்பர், 24 – ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரன்ஸ் இடமிருந்து லிபியா இராச்சியம் என விடுதலை பெற்றது.

1959, பிப்ரவரி, 19 – ஐக்கிய ராஜ்யத்திடமிருந்து சைப்ரஸ் விடுதலை பெற்றது.

1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோப் பின் இசாக் (Yusof bin Ishak) என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ (Lee Kuan Yew) பிரதமராகவும் ஆயினர்.

1960, அக்டோபர், 01 – நைஜீரியாவாடது ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

1963-இல் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர், மலாயா, சபா, சரவாக் ஆகிய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளுடன் சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1971, டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து UAE விடுதலை பெற்று நிறுவப்பட்டடது.

1979, மே, 4 – மார்கரெட் தட்சர் (Margaret Thatcher) இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.

1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதை அன்னை தெரேசா அவர்கள் பெற்றார்.


2020, ஆகஸ்ட், 25 – அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் சாதனை. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்தியவர்கள். முறையே, 1. முத்தையா முரளிதரன், 2. ஷேன் வார்ன் , 3 . அனில் கும்ப்ளே, 4. ஜேம்ஸ் ஆன்டர்சன்

2022, ஏப்ரல், 16 – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை. *உக்ரைனுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு கரம் நீட்டிவரும் நிலையில் ரஷ்யா அறிவிப்பு.

2022, செப்டம்பர், 05 – இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை எதிர்த்துப் போட்டியிட்ட லிஸ் டிரஸ் 81,326 வாக்குகள் பெற்று வெற்றி.

2022, செப்டம்பர், 05 – கொலைக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் சிறையில் தூக்கிலிடப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம், நீதி தவறியதற்காக இங்கிலாந்து காவல்துறை மன்னிப்புக் கோரியுள்ளது. 1952-ஆம் ஆண்டில் கார்டிஃப் நகரத்தில் ஆடை வியாபாரியான Lily Volpert என்ற பெண்ணை கொலை செய்ததற்காக, மஹ்மூத் மட்டான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மட்டான் குற்றம் புரியவில்லை என்று நிரூபிக்க அவருடைய மனைவியும், மகன்களும் கடந்த 46 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. நீதி தாமதமாகவே கிடைத்துள்ளது என்று மட்டானின் பேத்தி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

2022, செப்டம்பர், 18 – லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


ஐக்கிய நாடுகள் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்று.

முதல் உலகப் போரின் போது நேச நாடுகள் அணியில் இருந்தது.

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இங்கிலாந்து அரசிக்கு 1858 ஆம் ஆண்டு அதிகாரம் மாற்றப்பட்டது.

கடல்களின் அரசி என்று அழைக்கப்படும் நாடு இங்கிலாந்து.

உலகின் முதல் மின்சார தெருவிளக்கு பிரிட்டனில் உள்ள, கொடல்மின்க் என்னும் நகரத்தில் வைக்கப்பட்டது.

உலகின் மிகத் தூய்மையான ஆறு, தேம்ஸ் நதி ஆகும்.