இஞ்சி – சமையலறை மருத்துவர்!
- இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
- இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
- இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
- இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
- இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
- இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
- காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
- பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
- இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
- இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
- இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
- இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
- இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
- இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
- இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
- இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய் தடுப்பூசி திட்டம்
மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்
மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்
வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்
எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம் ஏன் தெரியுமா?
40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்
மூலிகை செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
உடல் அறிகுறி (Symptoms) – அதன் சந்தேகமும் பாதிப்புகளும்
பாம்புக்கடி மற்றும் பிற விஷக்கடிக்கான மருந்துகள்
சுக்குமல்லி காபி மருத்துவப் பயன்கள்
ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்
உங்கள் நலனுக்கானக் குறிப்புகள்
இஞ்சி கொண்டுள்ள மருத்துவ குணங்கள்
நமது உடலுக்குள் ஒரு மருத்துவர்