1324, ஜனவரி, 08 – அன்று, இத்தாலிய வணிகர் மார்க்கோபோலோ மறைந்தார்.

1642, ஜனவரி, 08 – அன்று, இத்தாலிய வாணியலாளர் கலீலியோ கலிலி மறைந்தார்.

1820 , மே, 12 – அன்று, செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரனமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் இத்தாலியில் உள்ள ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.

1860 – ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது.

1870 – ஆம் ஆண்டு, இருதியாக ரோம் நகரமும் அதன் சுற்று பகுதியும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது.

1874, ஏப்ரல், 25 – அன்று மார்க்கோனி இத்தாலியில் உள்ள பொலொனா நகரில் பிறந்தார்.

1917,, அக்டோபர், 24 – அன்று, முதலாம் உலகப் போரின் போது, சார்பெட்டோ போரில் (Battle of Caperetto), இத்தாலியைச் சேர்ந்த, சுமார், 600,000 வீரர்கள் எதிரியிடம் சரண்டைந்தனர்.

1919 ஆம் ஆண்டு இத்தாலியில் பாசிசம் தோன்றியது.

19221943 காலப்பகுதியில் இத்தாலி நாட்டுக்கு முசோலினி தலைமை வகித்தவர்.

1922, அக்டோபர், 24 – முசோலினி (Benito Mussolini) உதவியுடன் ரோம் நகரை நோக்கி ஒரு பேரணி நடத்த புரட்சிப்படையினரால் திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால், ரோம் சரண்டைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர், 28 அன்று, முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரி ஆனார். முசோலினி இத்தாலியில் பாசிசக் கொள்கையின் சிற்பி என்று அழைக்கப்படுகிறார். முசோலினி திரட்டிய இத்தாலிய இளைஞர்கள் பாஸிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டனர்.

1929, பிப்ரவரி, 11 – அன்று, இலாத்தரன் உடன்படிக்கையின் படி இத்தாலி பேரரசிடமிருந்து வாடிகன் சிட்டி தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

1937 ஆம் ஆண்டு இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ரோம் – பெர்லின் – டோக்கியோ ஆச்சு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இது இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.

1940, ஜூன், 10 – அன்று, இரண்டாம் உலகப்போரின் போது, இத்தாலியானது, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீது போர் பிரகடனம் செய்தது.

1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் இத்தாலி சரணடைந்தது.

1945, ஏப்ரல் இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர்.

1947, பிப்ரவரி, 10 – இத்தாலியிடமிருந்து, லிபியா விடுதலை பெற்றது.

1960, ஜனவரி, 01 – அன்று சோமாலியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது.

வாடிகன் சிட்டி (Vatican City) இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும்.