1853 – ஆம் ஆண்டு – இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து மும்பை மற்றும் தானே நகரங்களுக்கிடையேயான 34 கி.மீ. தூரத்திற்கு தொடங்கப்பட்டது. இந்தியாவில் இந்த இரயில் சேவை முதன்முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இது அதிக மக்களை விரைவாக ஏற்றிச் செல்லும் அமைப்பாகக் கருதப்படுகிறது.

1856, ஜூலை, 01 – தமிழகத்தின் முதல் இரும்புப் பாதையானது ராயபுரம் – வாலாஜாபாத் இடையே தொடங்கப்பட்டது.

1951 – ஆம் ஆண்டு, இந்தியன் இரயில்வே தேசியமயமாக்கப்பட்டது.

1952 இல் இரயில்வேயானது ‘இந்தியன் இரயில்வே’ என்ற பெயருடன் தேசிய மயமாக்கப்பட்டது. இந்தியன் இரயில்வேயின் தலைமையிடம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.

2018, செப்டம்பர் – இன் படி இந்தியாவில் 507 கி.மீ. நீள மெட்ரோ இரும்பு பாதைகள் 381 இரயில்களுடன் இயங்கி வருகிறது.

2021, நவம்பர், 21 – தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம். ஆன்லைன் பதிவக்கட்டணம் ரூ.1 லட்சமும், கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூ.1 கோடி வைப்புத்தொகை செலுத்தவேண்டும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

Ib’ என்பது இந்தியாவின் மிகக் குறுகிய ரயில் நிலையப் பெயர். ஒடிசாவில் ஜார்சுகுடாவிற்கு அருகில் அமைந்துள்ள ‘Ib’ ரயில் நிலையம் மற்றும் குஜராத்தில் உள்ள ‘Od’ ரயில் நிலையம் ஆகியவை இரண்டு எழுத்துக்களைக் கொண்ட இந்தியாவின் மிகக் குறுகிய ரயில் நிலையப் பெயர்களைக் கொண்டுள்ளன.

இந்திய இரயில்வேயின் தந்தை டல்ஹௌசி என்று அழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் முதல் ரயில் நிலையம் – போரி பண்டர் ரயில் நிலையம் ஆகும்.

இந்தியாவில் இரட்டை பிளாட்பாரத்துடன் கட்டப்பட்ட முதல் ரயில் நிலையம் மத்தியப் பிரதேசத்திலுள்ள கான்பூர் இரயில் நிலையம் ஆகும்.

தமிழகத்தின் முதல் இரயில் இருப்புப் பாதை இராயபுரம் – வாலாஜாபேட்டை இடையே அமைக்கப்பட்டது.

கொல்கத்தாவில், இந்தியவில் முதன் முதலாக சுரங்க இரயில் பாதை அமைக்கப்பட்டது.இந்திய இரயில்வே மண்டலங்கள்

வ. எண்மண்டங்கள்தலைமையிடம்
1 வடக்கு இரயில்வேபுதுடெல்லி
2வட மேற்கு இரயில்வேஜெய்ப்பூர்
3வட மத்திய இரயில்வேஅலகாபாத்
4வட கிழக்கு இரயில்வேகொரக்பூர்
5வடகிழக்கு எல்லை இரயில்வேகௌகாத்தி
6கிழக்கு இரயில்வேகொல்கத்தா
7கிழக்கு கடற்கரை இரயில்வேபுவனேஸ்வர்
8கிழக்கு மத்திய இரயில்வேஹசிப்பூர்
9மேற்கு மத்திய இரயில்வேஜபல்பூர்
10மத்திய இரயில்வேமும்பை (சத்திரபதி சிவாஜி முனையம்)
11மேற்கு இரயில்வேமும்பை (சர்ச்கேட்)
12தெற்கு இரயில்வேசென்னை
13தென் மத்திய இரயில்வேசெகந்தராபாத்
14தென் கிழக்கு இரயில்வேகொல்கத்தா
15தென்மேற்கு இரயில்வேஹூப்ளி
16தென் கிழக்கு மத்திய இரயில்வேபிலாஸ்பூர்
17கொங்கன் இரயில்வேநவி மும்பை

இந்திய மெட்ரோ இரயில் போக்குவரத்து

இந்தியாவில் 8 பெரு நகரங்களில் மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுகிறது.

நகரம்மாநிலம்
கொல்கத்தாமேற்கு வங்காளம்
சென்னைதமிழ்நாடு
புது டெல்லி
பெங்களூர்கர்நாடகா
குர்கயோன்ஹரியானா
மும்பைமகாராஷ்டிரா
ஜெய்ப்பூர்இராஜஸ்தான்
கொச்சிகேரளா