இந்தியக் கடவுச்சீட்டு, இந்தியக் குடியுரிமை பெற்ற எவருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச் சீட்டு ஆகும். இதை வைத்துக் கொண்டு பல நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.

இந்தியக் குடியுரிமையை நிலைநாட்டவும் இது உதவும்.

இந்தக் கடவுச்சீட்டை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல்வேறு கடவுச்சீட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் மூலமும் பெற முடியும்.

2014 ஆம் ஆண்டில் இந்திய அரசு 1 கோடி பேருக்கு கடவுச்சீட்டை வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 6 கோடி பேர் இதுவரையிலும் கடவுச்சீட்டைப் பெற்றுள்ளனர்.

வகைகள்

  • சாதாரண கடவுச்சீட்டு: கருப்பு நிற அட்டை இடப்பட்டிருக்கும் இவ்வகை கடவுச்சீட்டு கல்வி, சுற்றுலா, தொழில் ஆகியவற்றுக்காக பிற நாடுகளுக்கு சென்று வரும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. கடவுச்சீட்டைப் பெற விரும்புபவரின் வசதிக்கு ஏற்ப 36 பக்கங்களோ, 60 பக்கங்களோ இருக்கும். அதற்கேற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு : வெள்ளை அட்டை இடப்பட்டிருக்கும் இவ்வகையை இந்திய அரசை முன்னிறுத்தும் அதிகாரிகள் பெறலாம்.
  • சிறப்பு கடவுச்சீட்டு : மெரூன் நிற அட்டை கொண்ட இவ்வகை கடவுச்சீட்டுகள் இந்திய உயர் அதிகாரிகளுக்கும், இந்தியத் தூதர்களுக்கும் வழங்கப்படும்.

தோற்றம்

அட்டைகளில் கருப்பு நிறப் பின்புலத்துள் தங்க நிற எழுத்துக்களில் விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

அடையாள விவரங்கள்

சுயவிவரத்தில் கீழ்க்காணும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

  • வகை: “P”- தனிப்பட்டது (“Personal”), “D”- தூதர்களூக்கும் உயர் அதிகாரிகளுக்குமானது (“Diplomatic”), “S”- அரசு அதிகாரிகளுக்கானது (“Service”)
  • நாட்டுக் குறியீடு : IND
  • கடவுச்சீட்டு எண்
  • பின்பெயர்
  • பெயர்(கள்)
  • நாட்டவர்
  • பால்
  • பிறந்த நாள்
  • பிறந்த இடம்
  • வழங்கப்பட்ட இடம்
  • வழங்கப்பட்ட நாள்
  • காலாவதியாகும் நாள்
  • நிழற்படம்
  • நிழற்பட அச்சு
  • கையொப்பம்

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்