இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited), மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது.

இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது.

இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில், எட்டு மகாநவரத்தின நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நிலக்கரி நிறுவனம் விளங்குகிறது.

இதன் கிளைகள் தன்பாத், ராஞ்சி, பிலாஸ்பூர், நாக்பூர், சாம்பல்பூர், கோத்தகுடம் மற்றும் அசன்சால் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இது உலக அளவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்