இந்திய வரி விதிப்பு முறை உலகிலேயே மிக பழமையான வரிவிதிப்பு முறையாகும்.
இந்திய அரசியலமைப்பபுச் சட்டம் நன்கு கட்டமைக்கப்பட்ட வரி விதிப்பு முறையை வழங்கியுள்ளது.
வரி நிர்வாகம் மக்களாட்சி அடிப்படையில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 246 (ஏழாவது அட்டவணை) -இல் மத்திய, மாநில அரசுகளுக்கான சட்டமுறை வரி அதிகாரம் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
1860 ஆம் ஆண்டு, இந்தியாவில் முதன் முதலாக வருமான வரி, சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் விதிக்கப்பட்டது.
1937 – ஆம் ஆண்டு, தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.