பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது ஆகும்.

பண்டைக்காலத் தமிழ் நூல் தொகுப்புகளில் ஒன்றான பதிணென்கீழ்கணக்கு நூல்களுல் இதுவும் ஒன்று ஆகும்.

உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.

இதில் உள்ள ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகிறது.

இந்நூலின் ஆசிரியரான பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.

இவர் வாழ்ந்த ஊர் மதுரை ஆகும்.

இவர் சிவன், திருமால், பிரம்மன் முதலிய மூவரைப் பற்றியும் பாடியுள்ளார்.

இந்நூல் மொத்தம் 40 பாடல்களைக் கொண்டது.

இவற்றுள் ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே ‘பஃறொடை வெண்பாவால்’ ஆனது ஆகும்.

இந்நூலானது பிரம்மன் வழிபாடுதல் பற்றி குறிப்பிட்ட ஒரே பதிணென்கீழ்கணக்கு நூல் ஆகும்.

இந்நூலின், ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ எனவும் வழங்கப்பட்டது.

இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன.