1971, ஜனவரி, 25 – அன்று இமாச்சலப் பிரதேசம் மாநிலம் உருவாக்கப்பட்டது.

1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக அறிவிக்கப் பட்டது.

இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று ஆகும்.

இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மணாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள்.

காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது.

இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது.

தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

மாவட்டங்கள் – 12

தலைநகரம் – சிம்லா

மொழிகள் – இந்தி

ரேதங் கணவாய் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.

உலகின் மிக உயரமான சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அடல் சுரங்கப்பாதை (Atal Tunnel) ஆகும்.

உலகின் மிக உயர்ந்த கிரிக்கெட் மைதானம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.

பிளாஸ்டிக்கை தடை செய்த முதல் இந்திய மாநிலம்.

இந்தியாவின் பழக் கிண்ணம் என்று இம்மாநிலம் அழைக்கப்படுகிறது.

இம்மாநிலம் இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

ஆசியாவின் ஒரே இயற்கை பனிச்சறுக்கு வளையம் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சிம்லாவில் அமைந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள, சோலன் என்னும் நகரம் காளான்களின் நகரம் என்று வருணிக்கப்படுகிறது.

இது, இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிற்து.

காட்டுத்தீயைக் கண்டறிய இமாச்சலப் பிரதேச வனத்துறை செயற்கைக் கோள் கண்கானிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்