இயல்பீறு
எ.கா இளமை(ம்+ஐ)+பருவம்
இதில் நிலைமொழி ஈற்றில் (மை ம்+ஐ) இயல்பாகவே உயிரீறு(ஐ) அமைந்துள்ளது.
விதியீறு
எ.கா வண்ணம்+பிறமொழி
இதில் நிலைமொழி ஈற்றில் மகரமெய்(ம்) உள்ளது. அது, வருமொழியோடு புணரும்போது ‘மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும்’ என்னும் விதிப்படி கெட்டு, ‘வண்ண’ என உயிரீறாய் (ண – ண்+அ) என நிற்கும். இது விதியீறாகும்.
இவ்வாறு இயல்பாகவோ, இலக்கண விதிகளாலோ நிலைமொழி ஈற்றில் நிற்கும் உயிரெழுத்துகள், வருமொழி முதலில் உள்ள க,ச,த,ப என்னும் வல்லினத்தோடு புணரும் போது, பெரும்பாலும் அவ்வல்லெழுத்துகள் மிக்குப் புணரும்.
இயல்பு உயிரீறு
எ.கா இளமை+பருவம் – இளமைப்பருவம்
இதில், வருமொழி முதலில் உள்ள வல்லினம்(ப – ப்+அ) மிகுந்து இளமை+ப்+பருவம் இளமைப்பருவம் என்றானது.
விதி உயிரீறு
வண்ணம்+பிறமொழி – வண்ணப்பிறமொழி
இதில், நிலைமொழி ஈற்று மகரம் கெட்டு, வருமொழி முதலில் உள்ள வல்லினம்(பி – ப்+அ) மிக்கு
வண்ண+ப்+பிறமொழி – வண்ணப்பிறமொழி என்றானது.
விதி :
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும் வாதன மன்னே ” – நன்னூல் 165