இரண்டாம் உலகப்போர்இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 19391945 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர்.

வெர்செயின் உடன்படிக்கையின் படி முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது, இதில் உள்ள குறைபாடுகளே இரண்டாம் உலகப்போர் ஏற்படக் காரணம் ஆனது.

1937 ஆம் ஆண்டு இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ரோம் – பெர்லின் – டோக்கியோ ஆச்சு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இது இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.

1938 ஆம் ஆண்டு, ஹிட்லர், இங்கிலாந்து பிரதமர் நிவின் சேம்பர்லைனுடன் முயூனிச் என்ற இடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி செக்கோஸ்லோவோக்கியாவை கைப்பற்றியது இரண்டாம் உலகப்போருக்கு காரணமாயிற்று.

1939 ஆம் ஆண்டு, ஹிட்லர், ஜெர்மனியையும், கிழக்கு பிரஷ்யாவையையும் போலந்து வழியாக இராணுவச்சாலை அமைக்கும் உரிமையை வழங்குமாறு போலந்து நாட்டை நிர்பந்தித்தார் மற்றும் டான்சிக் (Danzig) துறைமுகத்தை தன்னிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தினார்.

இதனை போலந்து மறுக்கவே 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி ஹிட்லர் அந்நாட்டின் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி போலந்தை கைப்பற்றினார். இதுவே இரண்டாம் உலகப் போர் ஏற்பட உடனடி காரணமாக அமைந்தது.

1940, ஜூன், 10 – அன்று, இரண்டாம் உலகப்போரின் போது, இத்தாலியானது, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீது போர் பிரகடனம் செய்தது.

1944 ஆம் ஆண்டு, ஏப்ரல், 21, அன்று பிரான்ஸ் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது பிராண்ஸ் பெண்களின் பங்கிற்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை அப்போது அல்ஜியர்ஸை தளமாகக் கொண்ட ஜெனரல் சார்லஸ் டி கோலின் தற்காலிக அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்றியது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் நாள் ஜப்பானின், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித்தது.

உலகில் மனிதர்களை அழிக்க ஓரு நாடு இன்னெரு நாட்டின் மீது வீசிய முதல் ஹைட்ரஜன் அணுகுண்டு இதுவெ ஆகும்.

இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன.

இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது.

ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன.

இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.

செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின.

1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன.

ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது.

1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.

டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது.

அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது.

ஜப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது.

ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின.

1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது.

1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன

கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது.

மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது.

இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது.

அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

1933 – ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.

1945 – ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.