இராமநாதபுரம் (Ramanathapuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.

இதனை இராம்நாடு என்றும் முன்பு முகவை என்றும் அழைக்கப்பட்டது.

இராமேசுவரம் ஆனது சிவன் மற்றும் இராமரின் புனித யாத்திரை தலங்களாக இந்துக்கள் அறியப்படும் இடமாகும்.

உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் வருகை தரும் ஏர்வாடி தர்கா புனிதத் தலமாக கருதப்படுகிறது.

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார்.

1910 – இல் நிர்வாக வசதிக்காக மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1914 – அம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன் பாலமானது இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல் பாலம் ஆகும்.

1931, அக்டோபர், 15 – அன்று, டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.

1964, டிசம்பர், 22 முதல், 25 – வரை பெரும் புயல் தாக்கியதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி நகரம் முற்றிலும் அழிந்தது. இதில் சுமார் 1800 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக மதிப்பிடப்படுகிறது.

1980 – ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா தேசிய பூங்கா நிறுவப்பட்டது.

1985, மார்ச், 08 – அன்று அரசு அறிவிக்கை, அரசாணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 – இன்படி இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மேல்செல்வனூரில் பறவைகள் சரணாலயம் உள்ளது.



அணைகள்


ஆறுகள்