தலைநகரம் – தோரன்

ஆட்சிமொழி – பாரசீகம்

மக்கள் – ஈரானியர்

அரசாங்கம் – இஸ்லாமிய குடியரசு

பரப்பளவு – 16,48,195 சதுர கிலோ மீட்டர்.

நாணயம் – ஈரானிய ரியால் (IRR)

தொலைபேசி அழைப்புக்குறி 98

இணையக்குறி .ir

1979, ஏப்ரல், 01 – அன்று, முதல் அதிகார பூர்வமாக ஈரான் நாடனது இஸ்லாமிய குடியரசு நாடானது.

ஈரான் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஈரான் இசுலாமியக் குடியரசு மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும்.

ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில.

இதன் தலைநகரம் தெஹ்ரான். இந்நாடு பண்டைக்காலத்தில் பாரசீகம் (பெர்சியா) என்று அழைக்கப்பட்டது.

“ஈரான்” என்னும் சொல் பாரசீக மொழியில் “ஆரியரின் நிலம்” எனப் பொருள்படும்.

ஈரான் உலகின் மிகப் பழைய நாகரிகம் ஒன்றின் இருப்பிடமாக விளங்கியது.

ஈரானின் முதலாவது வம்ச ஆட்சி கிமு 2800 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில், ஈலமிய இராச்சியக் காலத்தில் உருவாகியது.

கிமு 625ல் “மெடே”க்கள் ஈரானை ஒன்றிணைத்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, ஈரானிய ஆக்கிமெடியப் பேரரசு, எலனிய செலூசியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சசானியப் பேரரசு என்பன இப்பகுதியில் உருவாகின.

கிபி 651 – ல் முஸ்லிம்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர். ஈரானியப் பின்-இஸ்லாமிய வம்சங்களும், பேரரசுகளும், பாரசீக மொழியையும், பண்பாட்டையும் ஈரானியச் சமவெளி முழுவதும் விரிவடையச் செய்தன. ஈரானியரின் சுதந்திரத்தை மீளவும் நிலைநாட்டிய தொடக்ககால வம்சங்களுள் தகிரியர், சபாரியர், சமானியர், புயியர் போன்றோர் அடங்குகின்றனர்.

சசானியக் காலத்தில் இருந்தே உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த இப்பெயர், 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.

ஈரானில், பாரசீக, அஜர்பைஜான், குர்து (குர்திஸ்தான்) மற்றும் கிலாக்கில் முக்கிய இன குழுக்கள் உள்ளன.

ஈரானில் 70%, பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்கள் பெண்கள் ஆவார்.