1879 – ஆம் ஆண்டு, லக்னோவில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.

லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், 1904, அக்டோபர், 02 – அன்று உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்னும் ஊரில் பிறந்தார்.

1922, பிப்ரவரி 5 இல், உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.

1963 முதல் 1967 வரை உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக சுதேஜா கிருபாலினி அவர்கள் பணியாற்றினார்.

1981 பிப்ரவரியில், ராஜீவ் காந்தி அவர்கள் சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு ஆவார்

உத்திரப்பிரதேசத்தில் கதக் என்னும் நடன அமைப்பு பிரசித்தி பெற்றது.

ஆக்ராவில், புதிய உலக அதிசயங்களுல் ஒன்றான தாஹ்மஹாலானது யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.