உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுக்களைக் குறிக்கிறது.
பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் இக் கல்வெட்டுக்களில் உள்ளது.
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள், 10ஆம் நூற்றாண்டு கால தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதிகளையும் விரிவாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன.
சோழர் காலத்து ஆட்சிமுறை உத்திரமேரூரிலிருந்து அறியப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்பைப் பற்றி கூறும் உத்திரமேரூர் கல்வெட்டு, சோழர்கள் காலத்தினைச் சேர்ந்தது ஆகும்.