நீதிமன்றம்மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1862

கர்நாடகா உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1884

அலகாபாத் உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1896

டெல்லி உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1966


1892 ஆம் ஆண்டு, அன்றைய தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்தர் காலின்ஸ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தை திறந்துவைத்தார்.

1877 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக முத்துசாமி அய்யர் நியமிக்கப்பட்டார்.

1950 ஆம் ஆண்டு, ஜனவரி, 28 அன்று, உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை துவங்கியது. அன்று முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது .

2020, ஆகஸ்ட், 11 அன்று, சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு, பாகம் பிரிக்கப்படாத பரம்பரைச் சொத்திலும் பங்கு உண்டு.

2022, செப்டம்பர், 16 – நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக் கோரிய மனுவினை உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது.


இந்தியாவின் மிகச்சிறிய உயர்நீதிமன்றம் மேகாலயா உயர்நீதிமன்றம் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய உயர் நீதிமன்றம் – அலகாபாத் உயர்நீதி மன்றம்.

இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் – கொல்கத்தா நீதிமன்றம்.

லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.


இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India’) இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன.

இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும், மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்டால், சட்டம் மற்றும் உண்மை விசயத்தில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கும்.

அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் ஆகும்.

நீதிபதி. எம்.ஹிதயத்துல்லா அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி வகித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்.

குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செந்து வைப்பவர் உச்ச நீதி மன்ற நீதிபதி ஆவார்.

இந்தியாவின் முதல் மின் நீதிமன்றம் – ஹைதராபாத் மின் நீதிமன்றம்