எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 – ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார்.

இவர் இங்கிலாந்தின் பெர்க்லி நகரில் பிறந்தார்.

இளவயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார்.

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார்.

இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார்.

இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது.

ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (COW-POX) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார்.

ஆனால், அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை.

பிறகு ஜென்னர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

அதை சோதித்துப் பார்க்க தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட நினைத்தார்.

தனது பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவ் பாக்ஸ் கிருமியை எடுத்து ஊசிமூலம் அச்சிறுவனின் உடலுக்குள் செலுத்தி கவ் பாக்ஸ் நோயை ஏற்படுத்தினார்.

சிறுவனும் நோயால் தாக்கப்பட்டான். சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார்.

ஆனால், அந்த சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை.

இதன்மூலம் கவ் பாக்ஸ் கிருமிகளை மேன்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார்.





சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)