தலைநகரம் – அடிஸ் அபாபா

அரசாங்கம் – கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசு

பரப்பளவு – 11,04,300 ச.கி.மீ

நாணயம் – பிர் (ETB)

தொலைபேசி அழைப்புக்குறி +251

இணையக்குறி .et

1995, ஆகஸ்ட், 21 – எத்தியோப்பியாவின் தற்போதைய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

எத்தியோப்பியா (Ethiopia), அதிகாரப்பூர்வமாக எத்தியோப்பியக் கூட்டாட்சி சனநாயகக் குடியரசு (Federal Democratic Republic of Ethiopia) என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடு ஆகும்.

இதன் எல்லைகளாக வடக்கு, மற்றும் வடகிழக்கே எரித்திரியா(Eritrea), கிழக்கே சீபூத்தீ (Djibouti), சோமாலியா (Somalia), மேற்கே சூடான் (Sudan), தெற்கு சூடான் (South Sudan), தெற்கே கென்யா (Kenya) ஆகிய நாடுகள் உள்ளன.

ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் ஆகும்.

உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான இறைமையைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். ஆர்மீனியாவுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.

1977, ஜூலை, 13 – அன்று சோமாலியாவானது எத்தியோப்பியா மீது போர்ப் பிரகடனம் செய்தது, இதன் விளைவாக இரு நாடிகளுக்குமிடையே Ogaden War துவங்கியது.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா