எலி (Rat) பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும்.

சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன.

ஓரிணை எலியானது வெறும் 18 மாதங்களில் பத்து இலட்சமாகப் பெருகுகின்றன.

மேலே குறிப்பிட்ட அனைத்து எலி வகைகளும் சாதாரணமாக தமிழகத்தில் வடலூருக்கும், வடக்கு பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தெற்கு, விருத்தாசலத்திற்கு கிழக்கு, கடலூருக்கு மேற்கு ஆகிய இடைப்பட்ட பகுதியில் காணப்படுபவையாகும்.

உலகம் பூராகவும் உள்ள எலிகளை எடுத்து நோக்கினால் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று கறுப்பு எலி, மற்றையது மண்ணிற எலியாகும். இவை ஆசியாக் கண்டத்திலேயே தோன்றின.

சீன இராசிவட்டத்தில் உள்ள பன்னிரண்டு மிருகங்களில் எலியும் ஒன்றாகும்.

மண்ணிற எலிகள் விஞ்ஞான ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணமாக எலி மரபணு பற்றிய ஆய்வுகளுக்கு இவ்வகை எலிகளே பயன்படுத்தப்படுகின்றன.

எலிகளுக்கு பற்கள் அதன் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதனால் எலிகள் எதனையாவது கொறித்து அதன் பற்களை தேய்க்கும்.

இல்லாவிட்டால், எலிகளினால் உணவு உட்கொள்ள முடியாத அளவு பற்கள் வளர்த்து அவை இறந்துவிடும்.

தாவரவியல்


மனித உடல் பாகங்கள்