முதலெடுத்து

“அ“ முதல் “ஓள“ வரையுள்ள பன்னிரெண்டு உயிரெழுத்துகளும் “க்” முதல் “ன்“ வரையுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக்களும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே – நன்னூல் 59

மொழிக்கு உயிர் போன்றவை உயிரெழுத்துகள் உடல் போன்றவை மெய்யெழுத்துகள். இவை 216 உயிர் மெய்யெழுத்துகள் தோன்ற அடிப்படையாய் உள்ளன. இவ்வாறு மொழிக்கு முதற்காரணமாய் விளங்குவதால் இவை முதலெழுத்துகள் என்று வழங்கப்படுகின்றன.

மாத்திரை

எழுத்தகள் ஒலிக்கப்படம் கால அளவுக்கு மாத்திரை என்று பெயா். நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் அல்லது கைநொப்பதற்கு ஆகும் ரேம் ஒரு மாத்திரை ஆகும்.

எழுத்தின் சாரியை

எழுத்தை ஒலிக்கும்போது ஓரை இனிமைக்காகவும் எளிமைக்காகவும் சாரியை சோ்த்து ஒலிக்கப்படும். கரம், காரம், கான், அகரம் என்பன எழுத்தின் சாரியைகள் ஆகும்.

உயிரெழுத்துகள் – 12

குறில்நெடில்
 ஐ (இ)
 ஓள (உ)

உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறிலெழுத்து அல்லது குற்றெழுத்து என்றும். நீண்ட ஓசையுடைய எழுத்துகள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும். குறிலெழுத்துகள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை  நேரத்திலும், நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.

குறிலெழுத்துகள் சற்று நீண்டு ஒலித்தே நெட்டெழுத்துகளாக மாறுகின்றன. எனவே ஒவ்வொரு நெட்டெழுத்திற்கும் அதற்குரிய குறிலெழுத்து இனவெழுத்தாகும். ஐ, ஔ ஆகிய இரு நெட்டெழுத்திற்கும் தனியே குற்றெழுத்தின்மையால் ஐகாரத்திற்கு இகரமும், ஓளகாரத்திற்கு உகரமும் இனக்குறிலெழுத்தாகக் கொள்ளப்படும். உயிர்க் குற்றெழுத்துகள் கரம், காரம், கான் ஆகிய மூன்று சாரியைகளையும் பெறும்.

எ.கா – அகரம், அகாரம், அஃகான் (அ)

உயிர் நெட்டெழுத்துகள் காரம் என்னும் சாரியை பெறும். ஐ, ஔ ஆகிய இரண்டு நெட்டெழுத்துகளும் காரம் என்னும் சாரியை பெறுதுடன் கான் சாரியையும் பெறும்.

எ.கா – ஆகாரம் – (ஆ)

ஐகாரம், ஐகான் – (ஐ)

ஓளகாரம், ஓளகான் – (ஓள)\

மெய்யெழுத்துகள் – 18

க,ச,ட,த,ப,ற          –     வல்லினம்

ங,ஞ,ண,ந,ம,ன  –     மெல்லினம்

ங,ர,ல,வ,ழ,ள    –     இடையினம்

மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடையவை வல்லினமென்றும், மென்மையான ஓசையுடையவை மெல்லினம் என்றும்,அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடையவை இடையினமென்றும் வழங்கப்படும். அவற்றை முறையே வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்றுங் கூறுவர். ஒவ்வொரு வல்லின எழுத்திற்கும் அதனையடுத்து வரும் மெல்லின எழுத்து இனவெழுத்தாகும்.

எ.கா – க் என்பதற்கு இனம் ங்

ச் என்பதற்கு எனம் ஞ்

மெய்யெழுத்துகள் அகரம் என்னும் சாரியை பெற்றுபெறும்.

எ.கா க் + அகரம் = (க்+அ)கரம் = ககரம்

மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிப்புடையன.

சார்பெழுத்துகள் – 10

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரௌபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. ஓளகாரக் குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக் குறுக்கம்

எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். இவை முதலெழுத்துகளைச் சார்ந்து வருதலானும், முதலெழுத்துகளின் திரிபு, விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்துகளாயின்.