திணைநிலம்சிறுபொழுதுபெரும்பொழுது
குறிஞ்சித்திணைமலையும் மலை சார்ந்த இடமும்யாமம்கூதிர், முன்பனி
பாலைத்திணைவெப்பம் மிகுந்த சுரமும், சுரம் சார்ந்த இடமும்நண்பகல்வேனில், பின்பனி  
முல்லைத்திணைகாடும், காடு சார்ந்த இடமும்மாலைகார்  
மருதத்திணைவயலும், வயல் சார்ந்த இடமும்வைகறைகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
நெய்தல் திணைகடலும், கடல் சார்ந்த இடமும்எற்பாடுகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

பெரும்பொழுது :

  • பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் கூறுபாடு. ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள்(மாதம்) கால அளவுடையது. இவை ஆறு வகைப்படும்.
காலம்திங்கள்
கார்ஆவணி, புரட்டாசி
கூதிர்ஐப்பசி, கார்த்திகை
முன்பனிமார்கழி, தை
பின்பனிமாசி, பங்குனி
இளவேனில்சித்திரை, வைகாசி
முதுவேனில்ஆனி, ஆடி

சிறுபொழுது :

  1. மாலை – கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முற்பகுதி.
  2. யாமம் – நள்ளிரவு. இரவுப்பொழுதின் நடுப்பகுதி.
  3. வைகறை – கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப் பொழுதின் இறுதிப்பகுதி.
  4. காலை – கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் முற்பகுதி, விடியற்காலம்.
  5. நண்பகல் – பகற்பொழுதின் நடுப்பகுதி.
  6. எற்பாடு – பகற்பொழுதின் இறுதிப்பகுதி, கதிரவன் மறைகின்ற காலம்.