பொருட் சிறப்புக்காக ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் வருவது ஒரு பொருட் பன்மொழியாகும்.
எ.கா
- மீமிசை ஞாயிறு
- ஓங்கி உயர்ந்த மரம்
இவற்றுள் மீ, மிசை ஆகிய இரு சொற்களும் ‘மேல்’ என்னும் ஒரே பொருளை உணர்த்துவன. ஓங்கி, உயர்ந்த என்பன இரண்டும் உயரமான என்னும் ஒரே பொருளைத் தருவன.