ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும்.
அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது “அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்” ஆகும்.
அதிர்வுகள் வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம் ஒன்றினூடாக காதுகளுக்குப் பயணித்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும்.
உடலியங்கியல், மற்றும் உளவியலில், காதுகளால் கேட்டுணரக்கூடிய பொறிமுறை அலைகளை உருவாக்கும் அதிர்வுகளைப் பெறுதலும், அவற்றை மூளையினால் உணர்தலுமே ஒலி எனப்படுகிறது.
டெசிபல் என்னும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது.
80 டெசிபலுக்கு மேற்பட்ட ஒலியானது, ஒலி மாசு எனப்படுகிறது.
90 டெசிபலுக்கு அதிகமான சப்தம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
95 டெசிபலுக்கு அதிகமான ஓசையை வருடக்கணக்கில் ஒருவர் கேட்டுவரும் பட்சத்தில், காதுகள் செவிடாகிவிடும்.
130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகலுக்கு வலி தரும், மன அமைதியைக் குலைக்கும்.