கடவுச்சொல் என்பது தற்பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாததாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒருவர் குறைந்தது 50 அலைபேசி எண்களையாவது நினைவில் வைத்திருப்பார். அன்று மனிதனின் நியாபக சக்தியை அவனால் உபயோகிக்க முடிந்தது. ஆனால் என்று கைப்பேசி என்று ஒன்று பிரபலம் ஆனதோ அன்றோடு மனிதனின் நியாபக சக்திக்கு வந்தது ஆபத்து. இன்று பலருக்க மனைவி, அப்பா, அம்மா போன்ற நெருங்கிய உறவினர்களின் அலைபேசி எண் கூட நினைவில் வைத்திருக்க முடியவில்லை.
நிலமை இப்படி இருக்கையில் கடவுச்சொற்களை எங்கே நினைவில் வைத்துக்கொள்வது. கைப்பேசி, ATM, online banking, இ-மெயில், சமூக வலைதளம் போன்ற ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கடவுச்சொல் தேவைப்படுகிறது.
இவை அனைத்திற்கும் ஒரே கடவுச்சொல்லினை வைப்பது என்பது தீர்வாக அமையாது, மறாக அது தீராத இன்னலில் கொண்டுசென்று விடும். அப்படி ஒரே கடவுச்சொல்லினை அனைத்து சேவைகளுக்கம் பயன்படுத்திலனால் உங்கள் கடவுச்சொல் தெரிந்தால் போதும் உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களையும் மிக எளிதாக பிரிதொருவரால் பெற்றுவிட முடியும்.
இன்று இருக்கும் தலையாய பிரச்சனை எதுவெனில் பயனர்கள் அவர்களில் கடவுச்சொல்லினை மிக எளிதாக யூகிக்கும் வகையில் அமைப்பதுதான் முதல் காரணம். ஒவ்வொரு சேவைக்கும் வேறுவேறான, கடினமாக கடவுச்சொல்லினை வைப்பதை விட இதற்கு வேறு வழி இல்லை. அனைத்து கடவுச்சொற்களையும் நினைவில் வைத்துக்கொள்வது உங்கள் பாடு.
இப்பகுதியில் மிக வலுவான கடவுச்சொல்லினை உருவாக்குவது எப்படி என்று காண்போம்.
- 8 எழுத்துக்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
- ஆங்கில் அகராதியில் உள்ள நேரடி வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.
- பிரபல சொற்றொடர்களையும் பயன்படுத்தக் கூடாது.
- இரண்டு வார்த்தைகளின் கலவையாக இருக்கலாம். எ.கா- btainnayna
- பிறந்தநாள், அலைபேசி எண் போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய அடுத்தவர் அறிந்த எண்களை பயன்படுத்தக்கூடாது.
- மிக எளினான கடவுச்சொல்லினை உபயோகிக்கக்கூடாது. எ.கா- 12345, iloveyou, ihateyou, windows, 54321
- ஆங்கில் எழுத்துக்களோடு எண்கள் மற்றும் special characters கலந்து உபயோகிக்கலாம். எ.கா- Fb&zmk@7622
- Two step verification உபயோகிப்பது பலன் அளிக்கும்.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து