கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்.

வாழ்ந்த காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டாகும்.

கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பர் ஆவார்.

கம்பரை திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்தார்.

கவிச்சக்ரவர்த்தி’ என்று போற்றப்படுபவர் கம்பர்.

‘கல்வியில் பெர்யவன் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’, ‘விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன்’, என்றும் தொடர்கள் அவர்தம் பெருமையை விளக்குகின்றன.

சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கும், சரசுவதி அந்தாதி முதலியன கம்பர் இயற்றிய வேறு நூல்களாகும்.

புகழேந்திப்புலவர், ஒட்டகூத்தர், ஔவையார் முதலியோர் கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் ஆவர்.