கரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும்.

கரப்பான் பூச்சியின் அறிவியல் பெயர் – பெரிப்ளாநட்ட அமெரிக்கனா

உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாகக் காணப்படுகிறது.

ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும்.

ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெண்ணிறமாக இருக்கும்.

கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது.

உடல் பலபகுதிகளாகப்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.

எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும்.

அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது.

கரையான்கள் கரப்பான்களில் இருந்து பரிணமித்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

6 கால்களில் நடக்கும் விலங்குகளுள் கரப்பான்பூச்சியே வேகமாக ஓடக்கூடியது. அது ஒரு மீட்டர் தூரத்தை கிட்டத்தட்ட 1 வினாடியில் கடக்கும்.

கரப்பான் பூச்சி மனிதனைத் தொட்டால் அது பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தன்னைச் சுத்தம் செய்து கொள்ளுமாம்.