கரும்பு என்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும்.

இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம்.

இது ‘கிராமினோ’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.

வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது.

இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது.

கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது.

புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு.

மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர்.

கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.

பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.

((க்யூபா)) அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால், ‘உலகின் சர்க்கரை கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது.

கரும்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும்.

இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது.

கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.

கரும்பில் உள்ள சக்கரையின் அளவு 70% ஆகும்.