1788 – ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்து “மாவட்ட ஆட்சியர்“ நியமிக்கப்பட்டார். அப்பொழுது 2 கோட்டங்களாக “வடக்கு“ மற்றும் “தெற்கு“ எனப் பிரிக்கப்பட்டு 2 மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.

1790-ஆம் ஆண்டு திரு. Clerk மற்றும் திரு. Balfour காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களாக இருந்து நிர்வகித்தனர்.

1794 – 1799-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தை கவனித்து வந்த அப்போதைய மாவட்ட ஆட்சியரான திரு. Lionel Place “Sarishtadar” என்ற பதவியை உருவாக்கி அவர்களை மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்து அவர்களுக்கு கீழ் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். திரு. Place ஆட்சிக் காலத்தில் தான் புகழ்மிக்க மதுராந்தகம் மற்றும் உத்திரமேரூரில் ஏரிகள் உருவாக்கப்பட்டது/கட்டப்பட்டது.

1911-ஆம் ஆண்டு திருப்பெரும்புதூர் முழுமையாக மேம்படுத்தப்பட்ட துணை வட்டமாக ஆக்கப்பட்டு 4-வது வருவாய் கோட்டமாக காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டங்கள் உருவாக்கப்பட்டது.

1960, ஏப்ரல், 01 – அன்று, Andra Pradesh and Madras Alteration of Boundaries Act, 1959-ன்படி திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் மாவட்டத்தின் துணை வட்டமான பள்ளிப்பட்டு சென்னை, தமிழ்நாட்டிற்க்கு மாற்றப்பட்டு அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

1968, ஜுலை ,1, – அன்று முதல காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகராக மாற்றப்பட்டது.

1968, ஜூலை, 06 – அன்று, காஞ்சிபுரம் மாவட்டமானது, செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.

1997, ஜூலை, 01 – அன்று காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட அதே நாளில் செங்கல்பட்டு வட்டத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வட்டம் வகுக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் 8 வட்டங்களான காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் கொண்டது.

காஞ்சிப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிக்கிளியில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

2019, நவம்பர், 12 – அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 அன்று தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது.

2019, நவம்பரு, 29 – தமிழ்நாட்டின் 37 ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

2021, அக்டோபர், 22 – அன்று, காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசர்கள், முகலாய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டது.

தற்போதைய மாவட்டங்களான காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை முன்னோரு காலத்தில் “தொண்டை மண்டலம்“ என அழைக்கப்பெற்றது.

இந்த தொண்டை மண்டலத்தின் தலைநகராக திகழ்ந்தது “காஞ்சிபுரம்“.

“கருங்குழி”, மதுராந்தகத்தில் அமைந்துள்ள கிராமம்.

காஞ்சிபுரம் அன்று ஆங்கிலேயர்களால் காஞ்சீவரம் என அழைக்கப்பட்டது.

எல்லா புனித நகரங்களை போன்றே காஞ்சிபுரமூம் வேகவதி ஆற்றின் கரையில் அமையப்பட்டது.

கிமு. 2-ம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரமாகவும், பின்பு 6 முதல 8-ஆம் நூற்றாண்டு வரை “பல்லவ” மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றி வரலாற்று சிறப்புமிக்க இடங்களான மகாபலிபுரம், திருவண்ணாமலை, மேலூர், சோளிங்கர், திருத்தணி மற்றும் திருப்பதி அமைந்துள்ளது.

மகாபலிபுர சிற்பக்கலைகள் பல்லவர்கள் கட்டட கலையின் எடுத்துக்காட்டாகும்.

பின்பு ஆட்சி செய்த விஜயநகர அரசர்கள் பல்லவர்களின் கட்டட மற்றும் மத பெருமையினை மதித்து 1500 ஆண்டுகள் ஆண்டனர்.

கவிஞர் காளிதாசர் அவருடைய படைப்ல் Nagareshu Kanchi அதாவது நகரங்களில் சிறந்தததும் மலர்களில் இனிய மணம் கொண்ட மல்லிகைப்பூ போன்றதும் பெண்களில் அழகிய ரம்மை போன்றவள் என்றும் மற்றும் மனித வாழ்க்கையினை நான்காக பிரிக்கப்பட்டதில் முழு நிறைவான Grahasthasnama எனவும் வர்ணித்துள்ளார்.

7-ஆம் நூற்றாண்டில் சிறந்த சீனப் பயணியான யுவான் சுவாங் காஞ்சி மாநகரம் 6 மைல் சுற்றளவும், அங்கு வாழும் மக்கள் வீரர்களாகவும், பக்திமான்களாகவும், நீதியின் மேல் பற்றும கற்பதில் பக்தி கொண்டவர்கள் என சிறப்பித்துக் கூறியுள்ளார்.

பனாரஸ்-க்கு பின் இரண்டாவதாக காஞ்சிபுரமே கற்பதில் புகழ் பெற்று திகழ்ந்தது.

கிறித்துவ காலத்திற்கு முன்பே வரலாற்றில் காஞ்சி மாநகரம் இடம் பெற்றுள்ளது.

கிமு. 2-ஆம் நூற்றாண்டில் Patanjali Mahabhashya –ஆல் இயற்றப்பட்ட மணிமேகலை என்ற நூலும், கவித்துவம் நிறைந்த தமிழ் நூலான பெரும்பாணாற்றுப்படையிலும் விரிவாக காஞ்சி மாநகரத்தை பற்றி கூறியுள்ளது.

சங்க நூலான “பத்துப்பாட்டு” நூலில் 2500 ஆண்டுகளுக்கு முன் பேரரர் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி மாநகரத்தை ஆட்சி செய்தார் என அறிய முடிகிறது.

ஆயிரம் கோயில்களின் நகரம் என்று காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் பட்டு நகர்ம் என்று காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பட்டு உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் ஏரிகளின் மாவட்டம் என்று காஞ்சிபுரம் அழைக்கப்டுகிறது. ஏனெனில் இங்கி மிக அதிள அளவிலான ஏரிகள் காணப்படுகின்றன.

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் மற்றும் அனுமின் நிலையம் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது.

அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம்.

மாமல்லபுரம் சிற்பங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.