சார்லஸ் ஜான் கானிங் பிரபு (Charles John Canning, 1st Earl Canning) (14 டிசம்பர் 1812 – 17 சூன் 1862), பிரித்தானிய அரசியல்வாதியும், 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 28 பிப்ரவரி 1856 முதல் 21 மார்ச் 1862 முடிய பதவி வகித்தவர்.

இந்தியத் தலைமை ஆளுநர் பணியில் (1856-1862)

  • 1856ல் விதவை மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • வட இந்தியா முழுவதும் நடந்த சிப்பாய் கிளர்ச்சியை ஒடுக்கினார்.
  • 1858ல் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
  • சென்னைப் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவைகள் 1858ல் நிறுவப்பட்டது.
  • பிரித்தானிய இந்தியா அரசின் நிர்வாகத்தை மேம்படுத்த இந்திய அரசுச் சட்டம், 1858 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கானிங் பிரபு, பொது இராணுவச் சட்டத்தை கொண்டுவந்தார் (The General Service Enlistment). இதன்படி தேவை ஏற்பட்டால் இந்திய சிப்பாய்கள் கடல் கடந்தும் போரில் ஈடுபட வேண்டும் என்பதாகும்.

1858 ஆம் ஆண்டு நவம்பர் 1 – ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும், முதலாம் வைசிராயாயுமான கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார். அது இந்திய மக்களின் மகாசாசனம் (உரிமை சாசனம்) என்றழைக்கப்பட்டது.

சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)