உலகின் மிக பழமையான வாய்க்காய்களில் ஒன்றான ஐ.நா அவையால் அங்கீகரிக்கப்பட்ட வாய்க்கால் ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் ஆகும்.

பவானி ஆற்றில் இருந்து பிரிந்து 56 மைல் தூரம் சீறிப் பாய்ந்து ஒடுகிறது.

இந்த வாய்க்காலைக் கட்டியவர் காலிங்கராயன் ஆவார்.

கி.பி. 1282 ஆம் ஆண்டு பாண்டிய மன்னன், வீரபாண்டியனின் பிரதிநிதியாகப் பூந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காலிங்கராயன்.

இப்பகுதிகள் முழுவதும் மேட்டுப்பகுதிகள் என்பதால் இங்கு ஆற்றுப்பாசனம் கிடையாது, கிணற்றுப் பாசனம் மட்டும் தான்.

போதுமான நீர் வசதி இல்லாததால், இங்கு விவசாயம் செழிக்கவில்லை. முக்கிய உணவுப்பயிரான நெல்கூட விளைவிக்க முடியவில்லை.

இந்த நிலையில் காலிங்கராயன், தன் மகனுக்குப் பெண் கேட்க தஞ்சைப் பகுதியில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக்குச் சென்றார்.

காலிங்கராயனின் உறவினர்கள், நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எப்படி பெண் தருவதெட கேலி செய்திருக்கின்றனர்.

இதைக்கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாத காலிங்கராயன், எங்களுடைய புன்செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்.

பவானி ஆற்றில் இருந்து தங்களுடைய மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டி நீரைக்கொண்டு வருவதுதான் காலிங்கராயனின் திட்டம்.

ஆனால், மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டுவது சாத்தியம் இல்லை என்று பலரும் சொல்லி இருக்கின்றனர்.

ஒரு நாள் காலிங்கராயனுக்கு ஒரு பாம்பு மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து செல்வதுபோலக் கனவு வருகிறது.

அதனால் வாய்க்காலையும் வளைத்து நெளித்து வெட்டுவது என முடிவு எடுக்கிறார்.

பல, இன்னல்களுக்குப் பறகு அவர் சபதம் எடுத்தப்படியே வெற்றிகரமாக வாய்க்காலை வெட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மேட்டுப் பகுதியை நோக்கப் பாயச் செய்தார். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாக மாறின.

1283 ஆம் ஆண்டு காலிங்கராயன் அணை திறக்கப்பட்டது.

உலகிலேயே மேட்டை நோக்கிப் பாய்கின்ற வாய்க்கால் இது ஒன்றுதான். வளைந்து நெளிந்து செல்வதால் இதை கோணவாய்க்கால் என்று சொல்லலாம்.

இவ்வாய்காலானது சுமார் 800 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இந்த வாய்க்கால், பவானி காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி, கொடுமுடி அவுடையார் பாளையம் வரை 104 மைல்கள் வரை பாயந்துசென்று, காவிரி ஆற்றில் கலக்கிறது.

இதன் மூலம் 15,473 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதனால், கரும்பு, நெல், மஞ்சள், வாழை, கிழங்கு, தென்னை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நலனுக்காக கால்வாயை வெட்டி சமர்பித்த நாளான தை மாதம் 5 ஆம் தேதியை, காலிங்கராயன் தினமாக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.

காலிங்கராயனை பெருமைப்படுத்தும் விதமாக அவரது முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை 2020 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிலையில் வாய்க்காலளை காலிங்கராயன் நாட்டுக்கு அற்பணித்த தை 5 ஆம் தேதியை அரசு விழாவாகக் கொண்டடாடப்படும் என்று விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.





சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)