1875 – ஆம் ஆண்டு, டென்னிஸ் விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் வரையறுக்கப்பட்டது.
1971, ஜனவரி, 05 – உலகின் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர் நகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது.
1973, ஜனவரி, 11 – அன்று, இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார்.
1974, ஜூலை, 13 – அன்று, இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி தோல்வியை கண்டது. அந்த அணிக்கு அஜித் வடேகர் கேப்டனாக இருந்தார்.
1983 – ஆம் ஆண்டு, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.
1989, நவம்பர், 24 – அன்று, சச்சின் டெண்டுல்கர், தனது, 16 வயதில் முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்து சாதனை படைத்தார்.
2007, செப்டம்பர், 24 – தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பையை வென்றது.
2008, ஏப்ரல், 18 – பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையே முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது.
2017, டிசம்பர், 22 – இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா 35 பந்துகளிலேயே சதம் விளாசி சாதித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் “அதிவேக சதம் அடித்தவர்” என்ற சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லருடன் பகிர்ந்து கொண்டார்.
2020, ஆகஸ்ட், 15 – அன்று, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய அணி முன்னால் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா அறிவிப்பு
2020, ஆகஸ்ட், 25 – அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் சாதனை. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார்.
2022, ஜனவரி, 07 – சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இனி தாமதமாக பந்துவீசினால், கடைசி ஓவரில் உள்வட்டத்திற்குள் ஒரு பீல்டரை நிறுத்த வேண்டும் – ஐசிசி அறிவிப்பு, மேலும், டி20 போட்டியின் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2.30 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொள்ள அனுமதி – ஐசிசி
2022, பிப்ரவரி, 06 – அகமதாபாத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதன்மூலம், ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெறுகிறது. ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், இந்தியா இதுவரை 999 போட்டிகளில் விளையாடி 518 வெற்றிகளையும், 439 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்திய அணி 9 ஆட்டங்களை சமனில் முடித்துள்ளது. 3 ஆட்டங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை. ஆயிரமாவது போட்டியில் இன்று களம் காணவுள்ள இந்திய அணியில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கரை சேர்ந்துள்ளது. இந்திய அணிக்காக சச்சின் விளையாடிய போட்டிகள் 463 ஆகும். மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ள இந்திய அணிக்கு சச்சின் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
2022, ஜூலை, 09 – இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் 13 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.
2022, அக்டோபர், 11 – தென்னாப்ரிக்காவுக்கு அணிக்கு எதிரான 3 போட்டிகள் கெண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது.
2022, செப்டம்பர், 21 – ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார்.
2022, அக்டோபர், 13 – டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடும் போட்டிகளை ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், டி20 உலகக்கோப்பை நேரலையாக திரையிடப்படுகிறது; இதற்காக ஐசிசி – ஐநாக்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2022, அக்டோபர், 27 – இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவிப்பு. வீரர், வீராங்கனைகளுக்கு டெஸ்டுக்கு ரூ.15 லட்சம், ஒரு நாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிப்பு.
இந்தியாவுக்கு அடுத்த படியாக (2022 ஆம் ஆண்டு) ஆஸ்திரேலியா 958 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. பாகிஸ்தான் அணி 936 போட்டிகளில் களம் கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக 581 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்தியவர்கள். முறையே, 1. முத்தையா முரளிதரன், 2. ஷேன் வார்ன் , 3 . அனில் கும்ப்ளே, 4. ஜேம்ஸ் ஆன்டர்சன்
கிரிக்கெட் மட்டையை செய்யப் பயன்படும் மரம் – வில்லோ ஆகும்.
இந்திய விமானப் படையின் Honorary பதவி பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின் டென்டுல்கர் ஆவார்.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து