கில்ஜி வம்சம் ( The Khilji dynasty) என்பது 1290 முதல் 1320 வரை தெற்காசியா முழுவதும் பரவியிருந்த ஓர் அரசு ஆகும்.

இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார்.

இவர்கள் துருக்கியைச் சார்ந்தவர்கள் ஆகும்.

தில்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம் ஆகும்.

அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில் இந்தியாவின் மீதான மங்கோலியர்கள் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.

கில்ஜி வம்சத்தினர் மத்திய ஆசியாவைச் சார்ந்த துருக்கியர்கள்.

இவர்கள் தில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் வசித்து வந்தனர்.

கில்ஜி எனும் சொல் ஆப்கானியக் கிராமம் ஒன்றின் பெயர் ஆகும்.

இவர்கள் ஆப்கானியர்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதால் ஆப்கானிய இனக் குழுக்களுள் ஒன்றாகக் கருதப்பட்டனர்.

அதன் காரணமாய் இவர்களை துருக்கிய-ஆப்கான் வம்சம் என்று அழைத்தனர்.

கில்ஜி அரசர்கள் சுல்தான்கள் என அழைக்கப்பட்டனர்.

இவர்களுள் ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி மற்றும் குத்புதீன் முபாரக் ஆகிய மூவர் மிகவும் முக்கியமான சுல்தான்களாக வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.

கி.பி. 1311 – ஆம் ஆண்டின்போது, டெல்லியை ஆண்டுகொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூா், மதுரைக்கு வந்து களஞ்சியத்திலிருந்த விலைமதிப்பற்ற நவரத்தினங்களையும், பொன் ஆபரணங்களையும், அரிதாக உள்ள பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துச் சென்றார்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)