குடியரசுத் தலைவர்பெயர்ஆண்டுபெற்ற வாக்குகள்
1950டாக்டர் இராஜேந்திர பிரசாத்போட்டியின்றி தேர்வு
1962சர்வபள்ளி இராமகிருஷ்ணன்98.2%
1967ஜூகீர் உசேன்56.2%
1969வி.வி.கிரி50.9%
1974பக்ருதின் அலி அகமது78.9%
1977நீலம் சஞ்சீவி ரெட்டிபோட்டியின்றி
1982ஜெயில் சிங்72.7%
1987ரா.வெங்கட்ராமன்72.3%
1992சங்கர் தயாள் சர்மா65.9%
1997கே.ஆர்.நாராயணன்95.0%
2002A.P.J. அப்துல் கலாம்89.6%
2007பிரதிபா பாட்டில்65.8%
2012பிரணாப் முகர்ஜி69.3%
2017ராம் நாத் கோவிந்த்65.7%
2022திரவுபதி முர்மு64.03%

1996, ஜூன், 01 – அன்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான நீலம் சஞ்சீவிரெட்டி மறைந்தார்.

2015, ஜூலை, 27 – இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் மறைந்தார்.

2020 , ஆகஸ்ட், 31 – உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமானார்!

2022, ஜூன், 21 – எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு.

2022, ஜூலை, 25 – இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார்.

2022, செப்டம்பர், 18 – லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


நீதிபதி. எம்.ஹிதயத்துல்லா அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி வகித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்.

இருமுறை இந்தியக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் இராஜேந்திர பிரசாத் ஆவார்.

தூக்கு தண்டனைக் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார்.

குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செந்து வைப்பவர் உச்ச நீதி மன்ற நீதிபதி ஆவார்.

இந்தியாவில் நீண்ட காலம் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் – இராஜேந்திர பிரசாத் ஆவார்.

முதல் முஸ்லீம் குடியரசுத் தலைவர் – ஜாகீர் உசேன் ஆவார்.

முதல் தற்காலிக குடியரசு தலைவர் – வி.வி.கிரி ஆவார்.

இந்திய பாதுகாப்புப் படைப் பிரிவு


 • இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
 • 35 வயது கடந்தவராக இருக்க வேண்டும்.
 • மக்களவை உறுப்பினர் தேர்தலில் பங்கு கொள்ளும் தகுதி இருக்க வேண்டும்.
 • இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் – குடியரசுத் தலைவர்
 • இந்தியாவின் நிர்வாகத் தலைவர் – குடியரசுத் தலைவர்
 • இந்தியைவின் முப்படைத் தளபதி – குடியரசுத் தலைவர்
 • இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை – ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
 • குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
 • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்
 • குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவரிடம்
 • குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் – குடியரசுத் தலைவரிடம்
 • குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் – மக்களவை(லோக்சபை)
 • துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – அமெரிக்கா
 • குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை – இரண்டாவது அட்டவணை
 • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் – டாக்டர் சஞ்சீவி ரெட்டி
 • இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் – டாக்டர் இராஜேந்திர பிரசாத்
 • தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் – கே.ஆர்.நாராயணன்
 • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது – 35
 • குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு – மூன்றில் இரு பங்கு
 • குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? – ஆம்
 • குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் – மக்களவை அல்லது மாநிலங்களவை
 • குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? – நான்கில் ஒரு பங்கு
 • புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் – 6 மாதங்களுக்குள்
 • இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் – யாரும் இல்லை
 • குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு – மூன்றில் இரு பங்கு
 • குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் – துணை குடியரசுத் தலைவர்
 • இந்தியாவின் பிரதிநிதி – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் – ஐந்து ஆண்டுகள்
 • துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் – ஐந்து ஆண்டுகள்
 • மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் – துணை குடியரசுத் தலைவர்
 • அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் – துணை குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் – துணை குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது – மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
 • துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது – மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
 • மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் – குடியரசுத் தலைவர்
 • பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் – மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
 • அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.
 • குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் – துணை குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
 • இந்திய பிரதமரை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் – குடியரசுத் தலைவர்
 • நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் – குடியரசுத் தலைவர்
 • தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் – குடியரசுத் தலைவர்
 • மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? – இல்லை
 • குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்
 • குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)
 • குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? – 12 உறுப்பினர்களை
 • பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் – குடியரசுத் தலைவர்
 • பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு – ஷரச்சு 123
 • குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை – 6 வாரங்கள்
 • மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் – குடியரசுத் தலைவர்
 • மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து – ஷரத்து 331
 • அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை – குடியரசுத் தலைவர்
 • பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை – குடியரசுத் தலைவர்
 • ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் – குடியரசுத் தலைவரிடம்
 • இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் – குடியரசுத் தலைவர்
 • உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து – ஷரத்து 143
 • உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • மாநில ஆளுநரை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் – ஷரத்து 352
 • குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் – ஷரத்து 360
 • ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் – பிரதமர்
 • இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் – குடியரசுத் தலைவர்
 • குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன – பாராளுமன்றம்
 • இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது – இங்கிலாந்து
 • இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் – ரூ.1,50,000
 • இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் – ரூ.1,25,000
 • இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
 • துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை – மாநிலங்களவை
 • குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்டால், சட்டம் மற்றம் உண்மை விசயத்தில் உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழணங்கும்.
 • இந்திய குடியரசுத் தலைவரின் இல்லம் – ராஷ்டிரபதி பவன் அகும். இது புது டெல்லியில் அமைந்துள்ளது.