குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம்: கி பி 320கி.பி. 551) இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது.

குப்தப் பேரரசை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் ஆவார்.

குப்தப் பேரரசின் தலைநகரம் பாடலிபுத்திரம் (பாட்னா) ஆகும்.

குப்தப் பேரரசின் ஆட்சி மொழி சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதமானது கலை, இலக்கியம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டது. பிராகிருதம் பேச்சு வழக்கில் இருந்தது.

கி பி 320 முதல் 550 வரை, குப்தர் எனும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப்பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்தது.

இப்பேரரசின் பகுதிகளாக இன்றைய பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் அமைந்திருந்தன.

அறிவியல், கணிதம், வானியல், சமயம், இந்திய தத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதால், குப்தப் பேரசின் காலம் இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு.

இந்த பொற்காலம் என்ற கருத்து தற்போதைய அறிஞர்களால் மறுக்கப்படுகிறது, குப்தர்களின் ஆட்சியில் ஏற்பட்டிருந்த அமைதியும், வளமும் அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவித்தன.

பதின்ம எண்முறை, இந்திய எண் முறை மற்றும் பூஜ்ஜியம் குப்தப் பேரரசுக் காலத்துக் கண்டுபிடிப்புக்களே. வரலாற்றாளர்கள், செந்நெறி நாகரிகத்தின் ஒரு மாதிரியாக குப்தப் பேரசை, ஹான் பேரரசு, தாங் பேரரசு மற்றும் ரோமப் பேரரசுடன் ஒன்றாக வைத்து எண்ணுகிறார்கள்.

குப்தப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆவார்கள்.

தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக ‘தட்சிணாபாபா’ படையெடுப்பை சமுத்திர குப்தர் மேற்கொண்டார்.

தனது இராணுவ சாதனைக்காக ‘இந்திய நெப்போலியன்’ என்று சமுத்திர குப்தர் அழைக்கப்பட்டார்.

கவிராஜன் என்று அழைக்கப்பட்டவர் – சமுத்திர குப்தர்.

மேலும் குப்தர்கள் காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், தருக்கம், கணிதம், வானவியல், இந்தியத் தத்துவம், சோதிடம், இந்து தொன்மவியல், இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற சமயங்கள் செழித்ததுடன், இந்துப் பண்பாடு, சமசுகிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்தது.

நான்காம் நூற்றாண்டின் சமசுகிருத மொழியின் மகாகவி காளிதாசன் தமது இரகுவம்சம் எனும் காவியத்தில், குப்த ஆட்சியாளர்கள், நடு ஆசியாவின் ஆமூ தாரியா ஆறு பாயும் இடங்களில் வாழும் சகர்கள் ஹூணர்கள், காம்போஜர்கள், கிராதர்கள் மற்றும் கிண்ணர நாடுகளையும் சேர்த்து, இந்தியத் துணைக்கண்டத்தின் 21 நாடுகளை வென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் பண்பாட்டு, நாகரீகம், கலைகள், இலக்கியங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தது. சமஸ்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றது.

குப்தர்களின் ஆட்சியில் கவிஞர் காளிதாசன், வானிலை மற்றும் கணித அறிஞர்களான ஆரியபட்டர் மற்றும் வராகமிகிரர், பஞ்சதந்திர நூலை எழுதிய விஷ்ணு குப்தர், காம சூத்திரம் நூலை எழுதிய வாத்சாயனர், ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதர் போன்ற பல்கலை அறிஞர்கள் வாழ்ந்தனர்.

குப்தர்கள் ஆட்சிக் காலத்தில்அறிவியல் மற்றும் அரசியல் நிர்வாகம் செழித்தோங்கி உச்சகட்டத்தை அடைந்தது. குப்தர்கள் தென்கிழக்கு ஆசியா நாடுகளுடனும் குறிப்பாக இலங்கை மற்றும் பர்மா போன்ற அண்டை நாடுகளுடன் பலமான வணிக உறவுகளைக் கொண்டிருந்தனர்.

குப்தப் பேரரசர் விஷ்ணு குப்தர் காலத்தில், குப்தப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் சிறிது சிறிதாக, நடு ஆசியாவின் ஹெப்தலைட்டு ஹூணர்களின் தொடர் ஆக்கிரமிப்புகளாலும், அண்டை நாட்டவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, இறுதியில் கி பி 550-இல் குப்தப் பேரரசு வீழ்ச்சியுற்றது.

குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் புதிய சிறிய, பெரிய நாடுகள் உருவானது. விஷ்ணு குப்தருக்குப் பின் வந்த பிற்கால குப்த அரசர்கள் மகதத்தின் பகுதிகளை மட்டும் ஆண்டனர்.

குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்று அழைக்கப்படுகிறது.

முதலாம் சந்திர குப்தரின் சாதனைகளைக் குறிக்கும் இரும்புத் தூண் கல்வெட்டு – மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு.

சமுத்திர குப்தரின் ஆட்சி அவரது ஆளுமை சாதனைகளை விளக்கும் கல்வெட்டு – அலகாபாத் தூண் கல்வெட்டு

குப்த வம்சத்தின் மூன்றாம் ஆட்சியாளரான முதலாம் சந்திர குப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார்.

கவிஞர் ஹரிசேரனை சந்திர குப்தர் ஆதிரித்தார்.

சந்திர குப்தர், மகாராஜா – அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார்.

குப்த வம்சத்தின் முதல் அரசர் ஶ்ரீகுப்தர்

‘வசுபந்து’ என்ற மாபெரும் பௌத்த அறிஞரை சமுத்திர குப்தர் ஆதரித்தார்.

சமுத்திர குப்தரின் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.