குயிலி பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி.

இவர் சிவகங்கை சீமை சேர்ந்த பெண்போராளி ஆவார்.

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்றது.

8 ஆண்டுகள் அவர் மனைவி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி என்றபெண் குத்திக் கொன்றார்.

அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.

1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார்.

மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார்.

குயிலி என்பவள் வேலுநாச்சியாரின் போர்படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்றியவர்.

வேலுநாச்சியாரின் நம்பிக்கை பெண்ணாகவும் திகழ்ந்தவள்.

வெள்ளையரை எதிர்த்து போரிடும் போது சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்ததால் அப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை.

சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவிற்காக விஜயதசமி அன்று கொலு தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது.

இதைப் பயன்படுத்தி பெண்கள் படையில் முதற்கட்டச் செயல்பாடாக குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக நியமித்து அனுப்பினார்.

அதன் பின்னர் தன் உடலில் எண்ணை பூசி வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் புகுந்து தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு அயுதக்கிடங்கை அழித்தாள்.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)