அ) நிலைமொழியிறுதிக் குற்றியலுகரம், உயிர் முதன்மொழியோடு புணரும்போது தான்ஊர்ந்து வந்த வல்லின மெய்யை நிறுத்தித் தான்மட்டும் மறையும். பின் அவ்வல்லின மெய்யுடன் வருமொழி முதலிலுள்ள உயிர் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி சேர்ந்து புணரும்.
எ.கா : கருத்தோடு+இசைத்த
1. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் கருத்தோ(ட்+உ)+இசைத்த
2. உடல்மேல் உயிர்வந்து ஒன்றியது
கருத்தோ(ட்+இ)சைத்த கருத்தோடிசைத்த
ஆ) நிலைமொழி இறுதிக் குற்றியலுகரம் யகர முதன்மொழியோடு புணரும்போது இகரமாகத் திரிந்து புணரும்.
எ.கா : களிறு+யானை
1. நெடிலோடு உயிர்த்தொடர் என்னும்
விதிப்படி றகர ஒற்று இரட்டியது
களி(ற்)று+யானை
2. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
களிற் (ற்+உ)+யானை
3. யவ்வரின் இய்யாம்
களிற்(ற்+இ)+யானை
களிற்றியானை
விதி :
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்
யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோ வழி ” நன்னூல் -164
இ) நிலைமொழி ஈற்றில் டகரத்தையும்(ட்), றகரத்தையும்(ற்) பற்றுக்கோடாகக் கொண்டுவரும் நெடிற்றொடர்க் குற்றுகரமும், உயிர்த்தொடர்க் குற்றுகரமும் வருமொழியோடு புணரும்போது தாம்ஊர்ந்து வரும் ஒற்றுகள் இரட்டித்துப் புணரும்.
நெடிற்றொடர் :
1. எ.கா : கோடு+அன்ன
டகர ஈறு கோடு(ட்+உ)+அன்ன
ஒற்று இரட்டித்தது கோ(ட்)டு+அன்ன
உக்குறள் மெய்விட்டோடியது கோட்(ட்+உ)+அன்ன
உடல்மேல் உயிர் வந்து ஒன்றியது கோட்(ட்+அ)ன்ன
கோட்டன்ன
2. எ.கா : ஆறு+கரை
றகர ஈறு ஆறு(ற்+உ)+கரை
ஒற்று இரட்டித்தது ஆ(ற்)று+கரை
வல்லெழுத்து மிக்கது ஆற்றுக்கரை
உயிர்த்தொடர் :
3. எ.கா : முரடு+காளை
டகர ஈறு முரடு(ட்+உ)+காளை
டகரம் இரட்டித்தது முர(ட்)டு+காளை
வலிமிக்கது முரட்டுக்காளை
4. எ.கா : களிறு+மருப்பு
றகர ஈறு களிறு(ற்+உ)+மருப்பு
றகரம் இரட்டித்தது களி(ற்)று+மருப்பு
களிற்றுமருப்பு
விதி :
“நெடிலோ டுயிர்த் தொடர்க் குற்றுக ரங்களுள்
டறவொற றிரட்டும் வேற்றுமை மிகவே ” நன்னூல் -183
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து