1498, மே, 20 – போர்ச்சுகீசியரான, வாஸ்கோடகாமா முதம் முதலில் இந்தியாவின் கோழிக்கோடு பகுதியை வந்தடைந்தார்.

1855, ஏப்ரல், 04 – அன்று, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் சுந்தரனார் பிறந்தார்.

1902 ஆம் ஆண்டு, கேரளாவில் முதன்முதலில் இரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது.

1956, நவம்பர், 01 அன்று கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.

2022, அக்டோபர், 24 – அன்று 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் காலை 11.30 மணிக்கு பதவி விலக வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் உத்தரவு பிறப்பித்தார்.


கேரளம் அல்லது கேரளா (Kerala) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.

20இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மேற்கில் அரபுக் கடல் உள்ளது.

மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும்.

தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர்.

கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம்.

பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும்.

இது கடவுளின் சொந்த நாடு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.

பெரியார் வனவிலங்கு சரணாலயம் கேரளாவில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் ஆகும்.

கேரளாவில் மோகினி ஆட்டம் ஆடப்படுகிறது.

HIV Positive வேட்பாளர்களுக்கு அரசாங்க வேலையை ஒதுக்கிய முதல் மாநிலம் கேரளா ஆகும்.

இந்தியாவின் நறுமணத்தோட்டம் என்று கேரளா அழைக்கப்படுகிறது. மேலும், கேரளா கடவுளின் பூமி என்று அழைக்கப்படுகிறது.

கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டமானது முந்திரியின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.

ஆண்களை விட பெண்கள் இம்மாநிலத்தில் அதிகம் ஆகும்.

இந்தியாவில், தேங்காய் மற்றும் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ஆகும்.

இந்தியாவின் முதல் பெண் காவல் நிலையம் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது.

அரபிக்கடலின், மேற்கு கடற்கரையில் கொச்சி துறைமுகம் அமைந்துள்ளது.

இந்தியா

இந்திய அரசு மாநிலங்கள் தமிழ்நாடு கேரளா உத்திரப் பிரதேசம் கர்நாடகா உத்திரகாண்ட் மத்தியப் பிரதேசம் கோவா பீகார் பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம் ஹரியானா அருணாச்சல பிரதேசம் மிசோரம் ராஜஸ்தான் குஜராத் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா ஒடிசா மகாராஷ்டிரா மேகாலயா ஜார்க்கண்ட் மேற்கு வங்காளம் அஸ்ஸாம் நாகாலாந்து சிக்கிம் யூனியன் பிரதேசங்கள் அந்தமான் – நிக்கோபார் ஜம்மு – காஷ்மீர் இலட்சத் தீவுகள் முக்கிய நகரங்கள் டில்லி மும்பை பெங்களூர் கேரளா கொல்கத்தா சென்னை ஹைதராபாத் இந்திய ஆறுகள் […]