1510 ஆம் ஆண்டிலிருந்து கோவாவுடன் போர்த்துகீசியர் வாணிபம் செய்துவந்தனர்

1961 இல் கோவா இந்தியாவோடு இணைக்கப்படும் வரை போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.

1962 – ஆண்டு, கோவாவானது இந்திய குடியரசில் இணைக்கப்பட்டது.

1987, மே, 30 – அன்று, கோவா, இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது.

2022, அக்டோபர், 12 – கோவா ஆருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக் 29கே ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுவதற்கு முன் வெளியேறிய விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.

இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

பனாஜி இம்மாநிலத் தலைநகரம் ஆகும். வாஸ்கோட காமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற மார்கோ 16 ஆம் நூற்றாண்டில் வியாபாரிகளாக குடிபுகுந்து விரைவில் நாட்டையே வெற்றி பெற்ற போர்ச்சுகீசியர்களின் கலாச்சாரம், செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட கடைசி நிலப்பகுதியாகும். இது இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.

டிசம்பர், 16 – கோவாவின் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை கோவாவிற்கு ஒவ்வொரு வருடமும் அயல்நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைக் கவருவதாக உள்ளது.

இது தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த வனவளங்களைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சார்ந்துள்ளது. இது பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

கோவாவில் மொத்தம் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ளது.

இந்தியாவின் கடற்கரை தலைநகரம் கோவா ஆகும்.

தேசிய கடல்சார் நிறுவனத்தின் தலைமையிடம் கோவாவில் உள்ள ‘டோனா போலா’ ஆகும்.

இரண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மாநிலமாகும்.

தனிநபர் வருமானம் அதிகமுள்ள மாநிலமாகும்.

ஆசியாவின் ஒரே கடற்படை விமான அருங்காட்சியகம் கோவாலுள்ள பனாஜியில் அமைந்துள்ளது.

இந்தியாவின் முதல் அச்சகம் இம்மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

அரபிக்கடலின், மேற்கு கடற்கரையில் மார்முகவ் துறைமுகம் அமைந்துள்ளது.