கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.

சாக்கிய இனக்குழுவின் அரசர் சுத்தோதனர், பட்டத்தரசி மாயாதேவி ஆகியோருக்கு மகனாக லும்பினி என்னுமிடத்தில் பிறந்தார்.

இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர்.

கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும்.

இவர் துறவு மேற்கொண்டு ஞானம் பெற்ற இடம் கயா (அரச மரத்தடி) ஆகும்.

இவர் 42 நாட்களுக்கு பிறகு ஞானம் பெற்றார்.

பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் “சாக்கிய முனி” என்றும் அழைக்கப்பட்டார்.

புத்தர் தமது முதல் சமைய சொற்பொழிவை வாரனாசியில் உள்ள வாரணாசியில் உள்ள சாரநாத் பூங்கா என்னும் இடத்தில் நிகழ்த்தினார்.

புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள்.

அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது.

மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும்.

குரு – சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் கோட்பாடுகள் தம்மா என்று அழைக்கப்படுகிறது.

கௌதம புத்தர் தனது என்பதாவது வயதில் குஷி நகரம் என்றும் இடத்தில் மறைந்தார்.

முதல் பௌத்த சங்கத்திற்கு உபாலி தலைமை தாங்கினார்.


கி.மு. 483 – ராஜகிருதம் என்ற இடத்தில் ககாகஷியப்பா தலைமையில் புத்த சமய முதல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆனந்தா மற்றும் உபிலி ஆகியோர் பங்கேற்றனர்.

கி.மு. 383 இரண்டாம் புத்தசமய மாநாடு வைசாலி என்ற இடத்தில் சபகாமி தலைமையில் நடைபெற்றது.

கி.மி. 250 மூன்றாவது புத்த சமய மாநாடு பாடலிபுத்திரத்தில் மொகாலிபுத்ததிஸா தலைமையிலி நடைபெற்றது.

பௌத்த சங்கம்

பௌத்த சங்கம்கூட்டியவர்நடைபெற்ற இடம்ஆண்டு
முதல் பௌத்த சங்க மாநாடுராஜகிருதம்கி.மு. 483
இரண்டாவது பௌத்த சங்க மாநாடுவைசாலிகி.மு. 383
மூன்றாவது பௌத்த சங்க மாநாடுஅசோகர்பாடலிபுத்திரம்கி.மு. 250
நான்காவது பௌத்த சங்க மாநாடுகாஷ்மீர்