சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு ஆவார்.

சரோஜினி நாயுடு அவர்கள் 1879, பிப்ரவரி 13 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார்.

சரோஜினி நாயுடு அவர்கள் 1949, மார்ச் 2 அன்று மறைந்தார்.

இவர் எழுத்தாளர், சுதந்திரப் போராளி, கவிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும், உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆவார்.

சரோஜினி நாயுடு அவர்கள் பிறந்த நாள் இந்தியாவின் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1905 ஆம் ஆண்டு வங்காளம் பிரிக்கப்பட்டது தொடர்ந்து இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் கலந்து கொண்டார்.

காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் கைதுக்குப் பிறகு சத்தியாகிரகத்தில் துடிப்புடன் கலந்துகொண்டார்.

ஜவகர்லால் நேருவை சரோஜினி நாயுடு அவர்கள் 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பிறகு சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரட்சனையை கையில் எடுத்தார்.

1925 ஆம் ஆண்டு சரோஜினி நாயுடு அவர்கள் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.

1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலட் சட்டத்தை பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பாக கருதப்பட்டது. காந்தி அவர்கள் இதனை எதிர்த்துப் போராட ஒத்துழையாமை இயக்கத்தை துவங்கினார், இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு .

ஜுலை 1919 ஆம் ஆண்டு சரோஜினி நாயுடு அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தலைவரானார்.

ஜனவரி 26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கோரியது.

1931 ஆம் ஆண்டு சரோஜினி நாயுடு அவர்கள், காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இனைந்து வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)