2011, அக்டோபர், 11 – ஆம் தேதியை, பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட ஐ.நா.சபை ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

அதன் படி ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர், 11 – அன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் என்பது இத்தினத்தின் மையக் கருத்தாகும்.