சவூதி அரேபியா அரேபிய வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய நாடாகும்.

வடமேற்கு எல்லையில் ஜோர்டான் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கத்தார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது. மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியா உலகில் அதிகளவு கச்சா எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கின்றது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது.

இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கச்சா எண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது.

1919 – 20 இல் இடம்பெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது.

2013 இல் சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்த நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்து.

மக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.

உலகில் நதிகளே இல்லாத நாடு சவூதி அரேபியா ஆகும்.

ABER என்னும் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.





ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா