1956 – ஆம் ஆண்டு, சாத்தனூர் அணை தென்பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது.
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.
இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம்.
தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும்.
இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன.
இங்குள்ள முதலைப்பண்ணையில்100க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்ந்து வருகின்றன.
திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரமும் செங்கத்திலிருந்து 24 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது.