சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும்.

இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம்.

தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் 1975 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது.

சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும்.

நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி.

இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம்.

சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், தெற்கில் மேற்கு வங்காளம் உள்ளன.

உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா சிக்கிமில் உள்ளது.

இந்தியாவுடன் இணைப்பு

1947 – ல் இந்தியா விடுதலையடைந்த போது, சிக்கிமும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது.

அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது.

இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்தார்.

சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது.

அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது.

நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரித்தனர்.

1975, மே, 16 – அன்று, சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

சுற்றுலா

சுற்றுலாத் துறை இம்மாநிலத்தின் ஒரு முக்கியமான வருவாய் ஈட்டும் துறை ஆகும்.

இம்மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.

மேலும் பௌத்தர்களுக்கு ஒரு முக்கியமான சமய மையமாகவும் அமைந்துள்ளது.

இங்கு சாங்கு ஏரி, குருதோங்மார் ஏரி, யும்தாங் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களும் ரும்டெக் மடம் போன்ற பௌத்தத் தலங்களும், நாதுலா எனும் இந்திய சீன எல்லைப் பகுதியும் குறிப்பிடத்தக்க இடங்களாகும்.

கேங்டாக் – அண்மைக் காலத்தில் கேங்டாக் நகரம் இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

ருஸ்தம்ஜி பூங்கா – ருஸ்தம்ஜி பூங்கா தலைநகர் கேங்டாக்கில் அரசுத் தலைமைத் செயலகத்திற்கு அருகிலுள்ளது. அரிய வகை மான்களும் சிவப்பு பாண்டாக் கரடிகளும் இங்கு வாழ்கின்றன.[2]

கஞ்சன் ஜங்கா மலை – கஞ்சன் ஜங்கா மலை மலையேற்ற வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறந்த சுற்றுலா இடமாக விளங்குகிறது.


இந்திய யூனியனில் கடைசியாக சேர்க்கப்பட்ட மாநிலம் – சிக்கிம்.

இந்திய அரசின் ஓர் இணை மாநில அந்தஸ்தைப் பெற்ற மாநிலம்.

இந்தியாவின் முதல் ஆர்கானிக் மாநிலமாகும்.

மூன்று நாடுகளுக்கிடையே அமைந்துள்ள மாநிலம் ஆகும்.

சிக்கிமில் மொத்தம் 11 அதிகாரபூர்வ மொழிகள் உள்ளன.

டீஸ்டா நதி சிக்கிமின் உயிர்நாடி ஆகும்.

இம்மாநிலம் தாவரவியளாலர்களின் சொர்கன் என்று வர்ணிக்கப்படுகிறது.